
358 கிமீ வேகத்தில் பயணித்து சாதனை படைத்த மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார்!
செய்தி முன்னோட்டம்
மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான பினின்ஃபரீனா, உலகின் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் கார் மாடலான பட்டிஸ்டா (Battista)-வை உருவாக்கியுள்ளது.
இந்த கார் வெறும் 8.55 வினாடிகளில் கால் மைலையும், அரை மைலை 13.38 வினாடிகளிலும் கடந்து சாதனைப் படைத்தது.
இந்த வேகத்தை விபாக்ஸ் மூலம் கண்டறிந்துள்ளனர். இந்த சோதனையின்போது பட்டிஸ்டா மணிக்கு 358.03 கிமீ வேகத்தில் பயணித்து இருக்கின்றது.
பெட்ரோல்களில் ஓடும் கார் கூட இந்த வேகத்திற்கு இணையாக செல்ல முடியாது. ஆகையால், பினின்ஃபரீனா பட்டிஸ்டா செய்திருக்கும் இந்த சாதனை உலக சாதனையாகப் பார்க்கப்படுகின்றது.
இந்த வேகத்திற்கு காரணமாக Michelin Pilot Sport Cup டயர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
எலக்ட்ரிக் கார்
பெட்ரோல் கார் வேகத்தையே மிஞ்சிய Battista எலக்ட்ரிக் கார்
பட்டிஸ்டாவில் நான்கு மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலகாவே நான்கு வீலுக்கும் இயங்கும் திறன் கடத்தப்படுகின்றது.
இதுமட்டுமின்றி, இந்த வாகனம் வெறும் 1.86 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.
4.75 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் கொண்டுள்ளது.
எலெக்ட்ரிக் காரில் மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்பட்டு, அதீத வேகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக சிறப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
அந்த கருவி 31 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் வரும் காரைகூட பூஜ்ஜியம் வேகத்திற்குக் கொண்டு வந்துவிடும்.
இத்தகைய சூப்பர் திறன் கொண்ட எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகளை வெகு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.