2023ஆம் ஆண்டில் வாகன சில்லறை விற்பனை 11% உயர்வு
வாகன சில்லறை விற்பனை கடந்த ஆண்டு 11% உயர்ந்து 2.39 கோடி யூனிட்டுகளாக வாளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு இரு சக்கர வாகனங்களின் விற்பனையானது, 9.5% அதிகரித்து 1.7 கோடி யூனிட்டுகளாக வளர்ந்துள்ளது. ஒட்டுமொத்த வாகன விற்பனை வளர்ச்சியில் இரு சக்கர வாகனங்களின் பங்கும் அதிகம் உள்ளது. கடந்த ஆண்டு விற்பனையான மூன்றில் இரண்டு பங்கு வாகனங்கள் இரு சக்கர வாகனங்களாகும். ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு(FADA) தரவுகளின் அடிப்படையில் இந்த வளர்ச்சிகள் கணக்கிடப்பட்டுள்ளன. அதனால், 2024ஆம் ஆண்டிலும் வாகன சில்லறை விற்பனை நன்றாக வளர்ச்சியடையும் என்று FADA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனைத்து வகையான வாகன விற்பனையும் இந்த ஆண்டு நன்கு வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2023இன் வாகன சில்லறை விற்பனை(YoY)
இரு சக்கர வாகன விற்பனை 9.5 சதவீதம் அதிகரித்து 1.71 கோடியாக உள்ளது. பயணிகள் வாகன விற்பனை 10.6% அதிகரித்து 38.6 லட்சமாக உள்ளது. வர்த்தக வாகன விற்பனை 8.3 சதவீதம் அதிகரித்து 9.94 லட்சமாக உள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை 58.5 சதவீதம் அதிகரித்து 10.81 லட்சமாக உள்ளது. டிராக்டர் விற்பனை 7.1 சதவீதம் அதிகரித்து 8.72 லட்சமாக உள்ளது. 2023 டிசம்பரில், ஒட்டுமொத்த வாகன விற்பனை 21% அதிகரித்து 19.91 லட்சமாக இருந்தது, இருசக்கர வாகன விற்பனை 28% அதிகரித்து 14.5 லட்சமாக இருந்தது.