Loading...
400 கிமீ+ ரேஞ்ச் தரும் புதிய ஆடி A2 e-tron எலக்ட்ரிக் கார்; முழு விவரங்கள் இதோ!
400 கிமீ+ ரேஞ்ச் தரும் புதிய ஆடி A2 e-tron எலக்ட்ரிக் கார்

400 கிமீ+ ரேஞ்ச் தரும் புதிய ஆடி A2 e-tron எலக்ட்ரிக் கார்; முழு விவரங்கள் இதோ!

எழுதியவர் Sekar Chinnappan
Aug 06, 2026
03:43 pm

செய்தி முன்னோட்டம்

ஆடி நிறுவனம் தனது தயாரிப்புகளிலேயே மிகக் குறைந்த மின்சாரத்தை செலவழித்து அதிக தூரம் செல்லக்கூடிய 'A2 e-tron' மாடலை இந்த ஆண்டின் இறுதிக்குள் உலகளவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த காம்பேக்ட் எலக்ட்ரிக் கார் WLTP அளவீட்டின்படி 100 கிலோமீட்டருக்கு வெறும் 12.8 கிலோவாட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. மேம்படுத்தப்பட்ட ஏரோடைனமிக்ஸ், அதிநவீன எலக்ட்ரிக் டிரைவ்ட்ரெய்ன் மற்றும் லித்தியம் அயன் பாஸ்பேட் (LFP) பேட்டரி தொழில்நுட்பம் ஆகியவை இந்த காரின் சிறப்பம்சங்களாகும்.

சிறப்பம்சம்

ஏரோடைனமிக் வடிவம் மற்றும் குறைந்த காற்றெதிர்ப்பு

ஆடியின் சிறிய ரக கார்களில் 0.24 என்ற மிகக் குறைந்த காற்றெதிர்ப்புக் கெழுவை (Drag Coefficient) கொண்ட காராக இது விளங்குகிறது.

வளைவான முன்பகுதி, கூரை வடிவமைப்பு, சிறப்பு ஏர் கர்ட்டன்கள் மற்றும் வீல்-ஆர்ச் காற்று மேலாண்மை ஆகியவற்றின் மூலம் இதன் ஆற்றல் இழப்பு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் காரின் முன் பகுதியில் உள்ள கூலிங் கிரில் தேவைப்படும் போது மட்டுமே திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 100 கி.மீ-க்கு 1 kWh அளவுக்கு மின்சார சேமிப்பு சாத்தியமாகிறது.

சார்ஜிங்

LFP பேட்டரி மற்றும் இருவழி சார்ஜிங் வசதி

இந்த காரில் 61 kWh திறன் கொண்ட LFP (Lithium Iron Phosphate) பேட்டரி மற்றும் 140 kW மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி தொழில்நுட்பம் காரின் ஆயுளை அதிகரிப்பதுடன், வழக்கமாக 100 சதவீதம் வரை சார்ஜ் செய்தாலும் பேட்டரி திறன் குறையாமல் பாதுகாக்கிறது.

மேலும், காரிலிருந்து வீட்டிற்குப் மின்சாரம் வழங்கும் V2H (Vehicle-to-Home) மற்றும் வெளிச்சாதனங்களை இயக்க உதவும் V2L (Vehicle-to-Load) ஆகிய இருவழி சார்ஜிங் (Bidirectional charging) வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பயன்பாடு

தினசரி பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் பயணம்

அதிகப்படியான தேவையற்ற அம்சங்களைத் தவிர்த்து, தினசரி பயணத்திற்கு ஏற்ற எளிய மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவு கொண்ட எலக்ட்ரிக் காராக இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் தெர்மல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மூலம் சார்ஜிங் திறனை 90 சதவீதம் வரை உயர்த்தி சாதனை படைத்துள்ளது.

ஆடம்பர எலக்ட்ரிக் கார் சந்தையில் எளிமையான மற்றும் வலிமையான நுழைவு மாடலாக ஆடி A2 e-tron விரைவில் களம் இறங்கவுள்ளது.

ADVERTISEMENT