Page Loader
விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய ஏத்தர் எனர்ஜி நிறுவனம்!
உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டிய ஏத்தர் எனர்ஜி நிறுவனம்

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய ஏத்தர் எனர்ஜி நிறுவனம்!

எழுதியவர் Siranjeevi
Feb 02, 2023
10:19 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய சந்தையில், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முன்னணியில் உள்ளது. பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது உற்பத்தி ஆலையில் இருந்து ஒரு லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஜென் 3 450X மாடல் ட்ரூ ரெட் நிற வேரியண்ட்டை வெளியிட்டுள்ளது. இவை, ஜனவரி மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற ஏத்தர் கம்யுனிட்டி டே நிகழ்வில் ஜென் 3 ரக ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி அறிமுகம் செய்தது. அதன்படி, வருடாந்திர அடிப்படையில் ஏத்தர் எனர்ஜி வாகன விற்பனை 330 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ஏத்தர் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டிய ஏத்தர் எனர்ஜி நிறுவனம் - ஓசூரில் இரண்டாவது ஆலை தொடக்கம்

கடந்த ஆண்டில் ஜனவரியில் மட்டும், 2 ஆயிரத்து 825 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.. இந்நிலையில், கடந்த மாதத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 12 ஆயிரத்து 149 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது. மேலும், ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைப்பதை அடுத்து ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை திறக்க உள்ளது. எனவே இதன்மூலம், ஏத்தர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைப்பதை அடுத்து ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை ஓசூரில் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.