புதிய வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது ஓலா எஸ்1, எஸ்1 ப்ரோ 'கெருவா'
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புதிய 'கெருவா' பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பதிப்பு, கூடுதல் வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 1.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 181 கிமீ வரை செல்லும் எனவும், அதிகபட்சமாக 116 கிமீ வேகத்தில் இதை ஓட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, செப்டம்பரில் சில்லறை விற்பனையைத் தொடங்கிய ஓலா, எஸ்1, எஸ்1 ப்ரோவுடன், பிரீமியம் ஸ்கூட்டர் பிரிவில் களமிறங்கியுள்ளது.
புதிய வண்ணங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
2022 ஆம் ஆண்டில், 1,50,000 யூனிட்களை தாண்டிய மொத்த விற்பனையுடன், இந்த ஆண்டில் இந்தியாவின் சிறந்த விற்பனையான EV உற்பத்தியாளராக, ஓலா உருவாகி உள்ளதாக, அதன் மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.