
இந்தியர்கள் கொண்டாட மறந்த சூப்பரான 5 பைக்குகள் இங்கே!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பிரபலமான பைக்குகளில் ஒன்று என்றால் பல வாகனங்களை கூற முடியும். ஆனால், வாடிக்கையாளர்கள் கொண்டாட மறந்த சிறந்த பைக்குகளை பற்றி தெரிந்துகொள்வோம். Tvs apache RTR200 4V பல்சர் பைக்குகளுக்கு எவ்வாறு தனி ரசிகர்கள் உண்டே அதேப்போல் இந்த அப்பாச்சி பைக்குகளுக்கும் தனி கூட்டமே உள்ளது. ஆனால், அதைவிட இந்த 200சிசி அப்பாச்சி பைக்கின் மீது கவனம் விழவில்லை, விலைக்கு ஏற்ப நல்ல திறனை கொடுத்தாலும், இந்த பைக் விரும்பி வாங்கப்படவில்லை. Suzuki Gixxer SF 250 ஐப்பானில் பிரபலமான இந்த சுஸுகி பைக் நம் நாட்டில் பெரும்பாலானோர் வாங்க மறுத்துள்ளனர். இதற்கு காரணமும் இந்த பைக்கின் விலை தான் ரூ.1.95 லட்சம் என்பது அதிகம் என்பதாகும்.
பைக் நிறுவனங்கள்
இந்திய வாடிக்கையாளர்கள் குறைவாக வாங்கிய சிறந்த பைக்குகள்
Yamaha FZ25 இந்த பைக் ஆனது இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய 250சிசி பைக். வெறும் ரூ.1.49 லட்சத்தில் கொண்ட இந்த பைக் ப்ளூடூத் இணைப்பு வசதி இல்லாதது இப்போது வரையிலும் பைக்கின் குறையாக பார்க்கப்படுகிறது. KTM RC 125 கேடிஎம் ஆர்சி125 பைக் ஆனது பைக்குகளிலேயே குறைவான இயக்க ஆற்றலை பெறும் பைக், ஆகும். இதனாலேயே, இந்தியாவின் விலைமிக்க 125சிசி பைக்காக கேடிஎம் ஆர்சி125 விளங்குகிறது. BMW G 310 GS விலையுர்ந்த பைக் ஆக இருந்தாலும், இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் விற்பனை செய்யும் விலை குறைவான 2வது பைக் இதுவாகும். 313சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிலும் பொருத்தப்படுவது ஒரு குறை தான்.