அடுத்த செய்திக் கட்டுரை
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சுங்க கட்டண உயர்வு!
எழுதியவர்
Siranjeevi
Mar 31, 2023
02:30 pm
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படும். இதனடிப்படையில், இந்த ஆண்டிலும் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இந்த கட்டணம் 5 ரூபாய் முதல் 55ரூபாய் வரை உயர உள்ளது. இதில் காருக்கு 60 ரூபாயில் இருந்து 70 ரூபாய் ஆகவும், இலகுரக வாகனங்களுக்கு 105 ரூபாயில் இருந்து 115 ரூபாய் ஆகவும், லாரிக்கு 240ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
#NewsUpdate | தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது!#SunNews | #TollPlaza pic.twitter.com/SUdgXMMwCT
— Sun News (@sunnewstamil) March 31, 2023