Page Loader
டோல்கேட் கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன?
சுங்க வரி கட்டணம் செலுத்துபவர்களுக்கு கிடைக்கும் இலவச சலுகைகள்

டோல்கேட் கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன?

எழுதியவர் Siranjeevi
Mar 13, 2023
11:49 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத் சுங்க வரியை செலுத்த வேண்டும். பலரும் பயணத்திற்காக மட்டும் தான் சுங்க கட்டணம் வசூலிப்பதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்காக மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பயணத்தின் போது பல சேவைகளை இந்த சுங்கச்சாவடிகள் வழங்கி வருகின்றன. அந்த வகையில், சுங்க வரி கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம். 1. தேசிய நெடுஞ்சாலையில் நீங்கள் பயணம் செய்யும் போது ஒரு வேளை உங்களுக்கு விபத்து ஏற்பட்டால், பயணிக்கு அவசர மருத்துவ உதவி தேவை என்றாலோ அதை சுங்கச்சாவடிகள் வழங்குகிறது. 2. அடுத்து உங்கள் வாகனம் நெடுஞ்சாலையில் பழுதடைந்தால் அப்போது, சுங்கச்சாவடிகள் கிரேன் சேவை மற்றும் பழுது ஆன வாகனத்தை சரிசெய்ய உதவுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை

டேல்கேட் இலவச வசதிகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

3. முக்கியமாக தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது பலருக்கு ஏற்படும் பிரச்சனை பெட்ரோல் காலியாவது தான். இப்படியான சூழ்நிலையை நீங்கள் சந்திக்கும் போது, சுங்கச்சாவடிக்கு போன் செய்தால் அவர்கள் நீங்கள் நிற்கும் இடத்திற்கே வந்து பெட்ரோலை டெலிவரி செய்யும் சேவையையும் செய்து வருகின்றனர். ஆனால், இச்சேவைக்கு நீங்கள் பெட்ரோலுக்கான பணத்தைக் கொடுக்க வேண்டும். 4. கடைசியாக ஒரு வசதி டாய்லெட் வசதி, பலர் இதை தற்போது பயன்படுத்தித் தான் வருகின்றனர். ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் நிச்சயம் கழிப்பறை வசதி இருக்கும். அதை நீங்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட அனைத்து சேவைகளையும் பயன்படுத்த நீங்கள் சுங்கச் சாவடியை எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும். அல்லது, இணையவழி மூலம் அருகில் உள்ள சுங்கச்சாவடி எண்ணை தேர்ந்தெடுத்து தொடர்பு கொள்ளலாம்.