
ஏப் 1 முதல் உயரப்போகும் டோல்கேட் கட்டணம் - மத்திய அரசு அதிரடி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
சுங்கச்சாவடிகளையும் நெடுஞ்சாலைகள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு நிர்வாகித்து வருகின்றனர்.
இதனிடையே, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் மார்ச் 25ம் தேதி நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் இதை சமர்பிக்கிறது.
மேலும் ஃபாஸ்ட்டேக் முறையில் தற்போது கட்டண வசூல் நடப்பதால் கார்டில் கழிக்கப்படும் தொகை அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை
இந்தியாவில் மீண்டும் உயரும் டோல்கேட் கட்டணம் - எவ்வளவு?
அதேப்போன்று தற்போது மத்திய அரசு எக்ஸ்பிரஸ் சாலைகளில் அதிக கட்டணத்தை வசூலிக்கிறது. அதன் படி ஒரு கி.மீ ரூ2.19 கட்டணமாக வசூலிக்கிறது .
எனவே, இந்த எக்ஸ்பிரஸ் சாலை கட்டணமும் வரும் ஏப்1ம் தேதி முதல் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 20 கி.மீ சுற்றளவில் வசிப்பவர்களுக்குச் மாத பாஸ் ஒன்று வழங்கப்படுகிறது.
அவை, ரூ.315 என்ற விலையில் இந்த பாஸ் வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்ல முடியும்.
இந்த பாஸ் சர்வீஸ் சாலை அல்லது வேறு வழிகள் இல்லாத சாலைகளைக் கொண்ட சுங்கச்சாவடிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது.