Page Loader
இந்தியாவில் ஜிக்சர் சீரியஸை அறிமுகம் செய்த சுசுகி!
2023 Suzuki Gixxer இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ஜிக்சர் சீரியஸை அறிமுகம் செய்த சுசுகி!

எழுதியவர் Siranjeevi
Feb 09, 2023
05:49 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய சந்தையில், சுசுகி நிறுவனம் தனது ஜிக்சர் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய ஜிக்சர் சீரிஸ் 155சிசி மற்றும் 250சிசி மாடல்கள் ஆகும். இவை நேக்கட் மற்றும் ஃபேர்டு என இருவித டிசைனிங்கில் கிடைக்கின்றன. 2023 சுசுகி ஜிக்சர் SF 250 தற்போது மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் No. 2 மற்றும் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ட்ரிடான் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இவை, 155சிசி ஜிக்சர் மாடல் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் பியல் பிளேஸ் ஆரஞ்சு, மெட்டாலிக் ட்ரிடான் பூளூ மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

2023 Suzuki Gixxer

2023 Suzuki Gixxer இந்தியாவில் பல நிறங்களில் அறிமுகம் செய்த சுசுகி

2023 மாடல்களில் சுசுகி நிறுவனம் சுசுகி ரைட் கனெக்ட் வசதியை வழங்கி இருக்கிறது. இதில் ப்ளூடுத் கனெக்டிவியை பொருத்தியுள்ளது. இத்துடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், எஸ்எம்எஸ் அலர்ட், மிஸல்டு கால் நோட்டிஃபிகேஷன், ஓவர்ஸ்பீடிங் அலர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், சுசுகி ஜிக்சர் 250சிசி மாடலில் 249சிசி, சிங்கில் சிலண்டர், ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.13 ஹெச்பி பவர், 22.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 155சிசி மாடலில் சிங்கில் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 13.41 ஹெச்பி பவர், 13.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.