புதிய மைல் கல்லை எட்டிய மாருதி சுசிகி! கடந்து வந்த பாதை
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியின் முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை உள்நாட்டில் மட்டுமே மொத்தம் 2.5 கோடி வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த 1981-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், முதல் காரான 'மாருதி 800' காரை கடந்த 1983-ல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது மாருதி சுசுகி நிறுவனம். அப்போது முதல் இப்போது வரையில் மக்களின் ரசனை மற்றும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் கார்களை மாருதி தயாரித்து வருகிறது. மலிவு விலையிலான காருக்கு பெயர் பெற்ற மாருதி சுசுகி நிறுவனம் சந்தையில் கிசாஷி, கிராண்ட் விட்டாரா மற்றும் நெக்ஸா போன்ற மாடல்களை அறிமுகம் செய்து தனது ரூட்டை மாற்றியது. 2006-ல் ஐந்து மில்லியன் மொத்த உள்நாட்டு விற்பனையை எட்டியது.
2.5 கோடி கார்களை விற்பனை செய்து மாருதி சுசுகி நிறுவனம் புதிய சாதனை
கடந்த ஆண்டு டிசம்பர் 2022-ல் மொத்தம் 1,12,010 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. டிசம்பர் 2022-ல் நிறுவனத்தின் மொத்த விற்பனை 9% குறைந்து 1,12,010 யூனிட்டுகளாக இருந்தது. அதேபோன்று, 2021 டிசம்பர் மாதத்துடன், 2022 டிசம்பரை ஒப்பிடுகையில் மாருதி சுசுகி நிறுவனம் 2021-ல் சுமார் 1,23,016 யூனிட்களை விற்றுள்ளது. தற்போது, இந்தியாவில் 17 மாடல்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. மேலும், சமீபத்தில் வளர்ந்து வரும் SUV மாடல்களில் மாருதி சுஸுகி தனது போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தி வருகிறது. இதற்கு முன் மாருதி சுசுகி இந்தியா பிப்ரவரி 2012 இல் ஒரு கோடி விற்பனையை எட்டியது; ஜூலை 2019 இல் இரண்டு கோடி விற்பனை மைல்கல் மற்றும் இந்த ஆண்டு ஜனவரியில் 2.5 கோடி விற்பனை குறி.