107 கிமீ செல்லும் 2023 பஜாஜ் செட்டக் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
இந்திய சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆனது, 2023 ஆண்டிற்கான செட்டக் பிரீமியம் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலில், பெரிய இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு உள்ளது.மேட் கோர்ஸ் கிரே, கரீபியன் புளூ மற்றும் சாடின் பிளாக் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. இதனுடன், டூ-டோன் சீட், பாடி நிறத்தால் ஆன ரியர் வியூ மிரர்கள், சாடின் கிராப் ரெயில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் ஹெட்லைட் கேசிங் மற்றும் ப்ளின்கர்கள் சார்கோல் பிளாக் நிறம் பூசப்பட்டுள்ளன. மேலும், புதிய பஜாஜ் செட்டக் மாடலில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி கொண்ட டிஜிட்டல் கன்சோல், ஸ்பீடோமீட்டர், ஒடோமீட்டர், ட்ரிப் மீட்டர், இரண்டு ரைடிங் மோட்கள், கொடுக்கப்பட்டுள்ளன.
பஜாஜ் நிறுவனத்தின் 107 கிமீ செல்லும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை என்ன?
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 107 கிலோமீட்டர் வரை செல்லும். சாதாரண சார்ஜர் கொண்டு இதன் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரங்களும் ஆகும். செட்டக் மாடலின் முன்புறம் ஒற்றை ஸ்ப்ரிங் மற்றும் பின்புறத்தின் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் டிரம் பிரேக் மற்றும் சிபிஎஸ் வசதி உள்ளது. இதன் பேட்டரி அதிகபட்சம் 7 ஆண்டுகள் அல்லது 70 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்துள்ளது. விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரத்து 910, என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.