இந்தியாவில் கூட தொழுகையின் போது மக்கள் கொல்லப்பட்டதில்லை: பாக். அமைச்சர்
பெஷாவர் மசூதிக்குள் நடந்த தற்கொலை தாக்குதலைக் குறித்து பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புதுறை அமைச்சர் குவாஜா ஆசிப், இந்தியாவில் கூட தொழுகையின் போது வழிபடுபவர்கள் கொல்லப்பட்டதில்லை என்று கூறி இருக்கிறார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தேசிய சட்டமன்றத்தில் தாக்குதல் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய ஆசிப், "இந்தியா மற்றும் இஸ்ரேலில் கூட தொழுகையின் போது வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டதில்லை, ஆனால் அது பாகிஸ்தானில் நடந்திருக்கிறது" என்று கூறியுள்ளார். மசூதியின் முக்கிய மண்டபத்தில் திங்கள்கிழமை(ஜன 30) மதியம் 1 மணியளவில் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண்டதை அடுத்து இந்த குணவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
பாகிஸ்தான் அமைச்சர் குவாஜா ஆசிப் கூறியதாவது
ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே இடத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது, இந்த மக்களுக்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று தெளிவாகக் கூறப்பட்டது. அவர்களை(பயங்கரவாதிகளை) சமாதானத்திற்கு கொண்டுவர வேண்டும். ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் வந்து குடியேறிய பிறகு மக்கள் வேலை இல்லாமல் தவித்தனர். ஸ்வாட் மக்கள் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். நேற்று நடந்த சோகத்தின் காரணமாக இந்த சம்பவங்களை நான் குறிப்பிடுகிறேன். ஜுஹ்ர் தொழுகையின் போது முன்வரிசையில் நின்ற பயங்கரவாதி ஒருவன் தன்னைத்தானே வெடிக்கச் செய்தான். 2011-2012 இல் வெளிப்படுத்தப்பட்ட அதே உறுதியும் ஒற்றுமையும் நமக்கு இப்போது தேவை. பயங்கரவாதத்தின் விதைகளை நாம் விதைத்திருக்கிறோம். இந்தியா மற்றும் இஸ்ரேலில் கூட தொழுகையின் போது வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டதில்லை, ஆனால் அது பாகிஸ்தானில் நடந்திருக்கிறது.