துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள்
செய்தி முன்னோட்டம்
நேற்று அதிகாலை முதல் துருக்கியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தொடர் நிலநடுக்கங்களில் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்துள்ளனர்.
பேரழிவுகளில் சிக்கி இருக்கும் இந்த நாடுகளுக்கு உதவி செய்ய பல உலக நாடுகள் முன்வந்துள்ளது. அதில் சில முக்கிய நாடுகள் என்ன உதவி வழங்கியது என்பதை இப்போது பார்க்கலாம்.
சீனா: துருக்கியின் நிவாரண பணிகளுக்கு உதவ சீனா, முதல் தவணையாக 40 மில்லியன் யுவான்($5.9 மில்லியன்) வழங்கும் என்று அறிவித்திருக்கிறது. சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தலா 200,000 டாலர்களை அவசர உதவியாக வழங்கும் என்று அறிவித்துள்ளது.
பாகிஸ்தான்: ஒரு விமானத்தில் நிவாரணப் பொருட்களையும், மற்றொரு விமானத்தில் 50 பேர் கொண்ட மீட்புக் குழுவையும் பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.
ரஷ்யா
ஆபத்தில் உதவிக்கு வந்த உலக நாடுகள்
ரஷ்யா: ரஷ்ய மீட்புக் குழுக்கள் சிரியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. 300 பேரை கொண்ட ரஷ்ய இராணுவ குழு உயிர் பிழைத்தவர்களைத் தேடவும் மீட்கவும் அனுப்பப்பட்டுள்னர். மனிதாபிமான உதவிகளை செய்ய ரஷ்ய இராணுவம் சிரியாவில் முகாம்களை அமைத்துள்ளது. துருக்கிக்கு உதவி செய்ய ரஷ்யா முன் வந்தது, அதை துருக்கியும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்கா: கிட்டத்தட்ட 100 லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்பு வீரர்கள் மற்றும் கட்டமைப்பு பொறியாளர்கள், ஆறு சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்களுடன், துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இது போக, தென்கொரியா, பிரிட்டன், இஸ்ரேல், இந்தியா, தைவான், ஜப்பான், பிரான்ஸ், மெக்ஸிகோ, எகிப்து போன்ற நாடுகளும் தங்கள் உதவி கரங்களை துருக்கிக்கும் சிரியாவுக்கும் வழங்கி வருகின்றன.