
சிரிப்பை கற்றுக்கொள்வதற்கு கோச்சிங் எடுக்கும் ஜப்பானியர்கள்
செய்தி முன்னோட்டம்
கொரோனா பரவலினால் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், எப்படி சிரிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள ஜப்பானியர்கள் கோச்சிங் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த மூன்று வருடங்களாக தங்களது முகத் தசைகளை அதிகம் பயன்படுத்தாததால், பலர் தாங்களே முன் வந்து, "சிரிப்பு பயிற்றுனர்களை" நியமித்துள்ளனர்.
2020 முதல், முகக்கவசம் அணிவது ஜப்பானில் கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கட்டுப்பாடுகளை கடைபிடித்தனர்.
மூன்று நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பானிய அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் தான், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவித்தது.
ஆனால், முகக்கவசங்களை அகற்றிய பிறகு தான், தங்களுக்கு எப்படி சிரிக்க வேண்டும் என்பதே மறந்துவிட்டது என்பது பலருக்கு புரிந்திருக்கிறது.
details
2 மணிநேர சிரிப்பு வகுப்புக்கு 4,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது
அதனால், டோக்கியோவில் உள்ள பல இளம் பள்ளி மாணவர்கள் "கெய்கோ கவானோவின் எகாவோய்கு("புன்னகைக் கல்வி" ) வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த வகுப்புகளில் அவர்கள் தங்களை தாங்களே கண்ணாடியில் பார்த்து கொண்டு, எப்படி சிரிப்பது என்பதை கற்றுக்கொள்கிறார்கள்.
இந்த வகுப்புகளை நடத்தும் நிறுவனத்திற்கு 2022ஆம் ஆண்டு இருந்ததை விட தற்போது நான்கு மடங்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
சிரிப்பு வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களில் ஒருவரான ஹிமாவாரி யோஷிதா என்ற 20 வயது பெண், வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் தனது சிரிப்பை சீராக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்த 2 மணிநேர சிரிப்பு வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு 7,700 யென்(ரூ.4,500) வசூலிக்கப்படுகிறது.
மேலும், இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன.