Page Loader
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய பட்டத்து இளவரசர்: யாரிந்த ஷேக் கலீத்
ஷேக் காலித், ஜனவரி 8, 1982 அன்று அபுதாபியில் பிறந்த, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் மூத்த மகனாவார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய பட்டத்து இளவரசர்: யாரிந்த ஷேக் கலீத்

எழுதியவர் Sindhuja SM
Mar 30, 2023
07:14 pm

செய்தி முன்னோட்டம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) அதிபர் தனது மூத்த மகனான ஷேக் கலீத்தை அபுதாபியின் பட்டத்து இளவரசராக நியமித்துள்ளார். இதன் மூலம், தனது குடும்பத்தின் அதிகாரத்தை வலுப்படுத்திய ஷேக் கலீத், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அடுத்த அதிபர் என்ற தகுதியை பெற்றுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், தனது மகனை பாரம்பரியமான இந்த காத்திருப்பு தலைவர் பதவிக்கு தேர்வு செய்திருக்கிறார். ஷேக் கலீத், ஜனவரி 8, 1982 அன்று அபுதாபியில் பிறந்த, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் மூத்த மகனாவார்.

UAE

நேரடியான வாரிசுகளுக்கு கிடைத்திருக்கும் சலுகை

ஷேக் கலீத், ஷார்ஜாவின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, 2014 இல் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் போர் ஆய்வுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். ஷேக் கலீத், அபுதாபி நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், அபுதாபி நிர்வாக அலுவலகத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ஷேக் கலீத்தின் நியமனம் சவுதி அரேபியா மற்றும் கத்தார் உள்ளிட்ட பிற வளைகுடா ஆட்சியாளர்களால் வரவேற்கப்பட்டது என்று செய்தி நிறுவனம் AFP தெரிவித்துள்ளது. வளைகுடா முடியாட்சிகளில் சமீபகாலமாக நேரடியான வாரிசுகளுக்கு மட்டுமே அரச பதவி வழங்கப்பட்டு வருகிறது. சவூதி அரேபியாவில், பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான், பல மூத்த குடும்ப உறுப்பினர்களையும் தாண்டி, நேரடியான வாரிசு என்ற காரணத்திற்காக ஆட்சிக்கு வந்தார்.