
கனடாவில் நூற்றாண்டு பழமையான சீக்கிய குருத்வாராவை சேதப்படுத்தி காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அட்டூழியம்
செய்தி முன்னோட்டம்
கனடாவின் வான்கூவரில் உள்ள ஒரு முக்கிய குருத்வாரா, காலிஸ்தான் ஆதரவு வாசகங்களுடன் சேதப்படுத்தப்பட்டது. இது சீக்கிய சமூகத்தினரிடையே கவலைகளைத் தூண்டியது.
இந்த சம்பவம் ராஸ் தெருவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கல்சா திவான் சொசைட்டி (கேடிஎஸ்) குருத்வாராவில் இரவு நடந்துள்ளது.
மேலும் அருகிலுள்ள சர்ரேயில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய வைசாகி அணிவகுப்பின்போது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
குருத்வாரா நிர்வாகத்தால் பகிரப்பட்ட புகைப்படங்களில் கோயிலின் சுற்றுச்சுவரில் காலிஸ்தான் என்ற வார்த்தை பல முறை ஸ்ப்ரே-பெயின்ட் செய்யப்பட்டிருப்பதைக் காட்டியது.
சனிக்கிழமை (ஏப்ரல் 19) அதிகாலை நடந்த இந்த சம்பவம் குறித்து வான்கூவர் காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வேதனை
கல்சா திவான் சொசைட்டி வேதனையுடன் அறிக்கை வெளியீடு
ஒரு அறிக்கையில், கல்சா திவான் சொசைட்டி இந்தச் செயலைக் கண்டித்து, இது சமூகத்திற்கு வேதனைகரமான தருணம் என்று விவரித்தது.
சீக்கிய பிரிவினைவாதிகளின் ஒரு சிறிய குழு கோயிலின் புனித சுவர்களை காலிஸ்தான் ஜிந்தாபாத் போன்ற வாசகங்களுடன் சிதைத்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கனடிய சீக்கிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் பிரிவினையை உருவாக்கவும் தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நாசவேலைச் செயல் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1906 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ரோஸ் ஸ்ட்ரீட் குருத்வாரா கனடாவின் பழமையான சீக்கிய குருத்வாராக்களில் ஒன்றாகும்.
மேலும் இது நீண்ட காலமாக சமூக ஒற்றுமை மற்றும் மீள்தன்மையின் அடையாளமாக செயல்பட்டு வருகிறது.