Loading...
250 நாட்களாக கரையை தொடவில்லை: அமெரிக்கப் போர்க்கப்பலில் மன உளைச்சலால் மாலுமிகள் தற்கொலை முயற்சி
அமெரிக்கப் போர்க்கப்பலில் மன உளைச்சலால் மாலுமிகள் தற்கொலை முயற்சி

250 நாட்களாக கரையை தொடவில்லை: அமெரிக்கப் போர்க்கப்பலில் மன உளைச்சலால் மாலுமிகள் தற்கொலை முயற்சி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 13, 2026
10:04 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க கடற்படையின் USS Abraham Lincoln என்ற விமான தாங்கி போர்க்கப்பலில் பணியாற்றி வரும் 5,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள், தொடர்ச்சியாக 250 நாட்களாக கரையை தொடாமல் கடலிலேயே முடங்கியுள்ளதால் அங்கு கடுமையான மனநல பாதிப்பு மற்றும் மன உளைச்சல் நிலை உருவெடுத்துள்ளது. கடந்த நவம்பர் 21 அன்று பசிபிக் பகுதிக்கு வழக்கமான ரோந்து பணிக்காகச் சென்ற இப்போர்க்கப்பல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் -ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாக மத்திய கிழக்கு பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. மே மாதமே முடிவடைய வேண்டிய பணி, பலமுறை நீட்டிக்கப்பட்டதால் வீரர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். பலர் கப்பலில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.

குடும்பத்தினர் கூட்டம்

சான் டியாகோவில் உணர்ச்சிவசப்பட்ட குடும்பத்தினர் கூட்டம்

கப்பலில் உள்ள வீரர்களின் குடும்பத்தினருக்காக சான் டியாகோவில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 200 உறவினர்கள் கலந்துகொண்டு தங்களது வேதனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

'நாளைக் காலை தான் விடியாமல் இருக்க வேண்டும் எனத் தனது கணவர் குறுஞ்செய்தி அனுப்பியதாக' ஒரு பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கடற்படைத் தலைமை தங்களது நம்பிக்கையை முற்றிலுமாக உடைத்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

அடிப்படை வசதிகள்

கப்பலில் நிலவும் மோசமான அடிப்படை வசதிகள்

அமெரிக்கக் மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் மைக் லெவின் மற்றும் பிற தலைவர்கள் இச்சம்பவம் குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.

கப்பலில் பூஞ்சை பிடித்த குளியலறைகள், பழுதுடைந்த கழிவறைகள், சுடுநீர் வசதி இல்லாத நிலை மற்றும் வாரக்கணக்கில் இயங்காத துணி துவைக்கும் இயந்திரங்கள் என அடிப்படை வசதிகள் சீர்குலைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், சோப்பு, பேஸ்ட் போன்ற பொருட்களின் பற்றாக்குறையுடன், வீரர்களுக்கு அரை கப் அரிசி மற்றும் இரு ரொட்டிகள் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

நிலைப்பாடு

அரசு மற்றும் கடற்படையின் நிலைப்பாடு

முன்னதாக ஏப்ரல் மாதத்தில் கப்பலில் நிலவும் அவலநிலை குறித்துப் புகைப்படங்கள் வெளியானபோது, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் அதனை 'போலிச் செய்தி' என மறுத்திருந்தார்.

இருப்பினும், போர்க் காலத்தில் வீரர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யாமல், அவர்களின் உணர்வுகளை போலிச் செய்தி எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என மக்கள் பிரதிநிதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT