எப்ஸ்டீன் பாலியல் வழக்கு: ரகசிய ஆவணங்களை வெளியிட அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ரகசிய ஆவணங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கான புதிய சட்ட மசோதாவில் அவர் வியாழக்கிழமை கையெழுத்திட்டார். எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட அவர் உத்தரவிட்டது, தனிப்பட்ட முறையில் அவரது வெளிப்படைத்தன்மைக்கு கிடைத்த வெற்றி என்றும், அதை கொல்ல குடியரசுக் கட்சியினர் எடுக்கும் முயற்சிகளுக்கு முரணானது என்றும் டிரம்ப் ஒரு நீண்ட ட்ரூத் சோஷியல் பதிவில் அறிவித்தார். எப்ஸ்டீனிற்கு ஜனநாயகக் கட்சியினருடன் உள்ள தொடர்புகளையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டம் 427-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அவையில் நிறைவேறியதை அடுத்து அவரது பதிவு வந்தது.
பின்னணி
வேகமெடுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம்
"எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளிப்படைத்தன்மை சட்டம்" மூலம், எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து ரகசியமற்ற கோப்புகளையும் அடுத்த 30 நாட்களுக்குள் அமெரிக்க நீதித்துறை வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் வேறு சில முக்கிய கூட்டாட்சி விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் மறைப்பதற்கு அட்டர்னி ஜெனரலுக்கு அனுமதி அளிப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்ட கையோடு, அதிபர் டிரம்ப் ஜனநாயகக் கட்சியினரை கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், "எப்ஸ்டீன் ஒரு நீண்டகால ஜனநாயகக் கட்சி ஆதரவாளர். அவர் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட பல முக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்," என்று குறிப்பிட்டுள்ளார்.