
விமானப்படை விமானத்தில் ஏறும் போது தடுமாறி விழுந்த அமெரிக்க அதிபர்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானப்படை விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறும் போது தடுமாறி விழுந்ததாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
சுருக்கமான இந்த வீடியோவில் பைடன் விமான படிகளில் ஏறுவதையும் தடுமாறி விழுவதையும் காண முடிகிறது.
அதன் பிறகு, அவர் திரும்பி கீழே இருக்கும் மக்களுக்கு கை அசைக்கிறார்.
80 வயதான ஜோ பைடன் உக்ரைன் மற்றும் போலந்திற்கு சென்று, தன் திடீர் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவுக்குத் திரும்பும் வழியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
80 வயதில் அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் மிக வயதான அதிபர் ஜோ பைடன் ஆவார்.
போலந்தில் வைத்து இவர் ஒரு மாதிரி நடப்பதாக ட்விட்டர் வாசிகள் கூறியதை அடுத்து இந்த வீடியோ வைரலாகி இருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஜோ பைடன் தடுமாறி விழும் வீடியோ
Biden falls while walking up the stairs to Air Force One once again.
— Collin Rugg (@CollinRugg) February 22, 2023
This comes just hours after Twitter users noticed he was walking strange during Poland visit.pic.twitter.com/S4a85rB89x