LOADING...
'அமைதியானவர், ஆனால் கில்லர்!': ஜி7 மாநாட்டில் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய டொனால்ட் டிரம்ப்
நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய டொனால்ட் டிரம்ப்

'அமைதியானவர், ஆனால் கில்லர்!': ஜி7 மாநாட்டில் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய டொனால்ட் டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 17, 2026
07:27 pm

செய்தி முன்னோட்டம்

பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் தங்களின் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருகின்றனர். இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை "அமைதியானவர்", "நிதானமானவர்" மற்றும் "முழுமையான கில்லர்" என்று வர்ணித்துப் பாராட்டியுள்ளார். இந்த வார்த்தைகள் இரு தலைவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கமான தனிப்பட்ட நட்புறவை மீண்டும் உலக மேடையில் வெளிப்படுத்தியுள்ளது.

புகழாரம்

"அவர் என்னை மாதிரி இல்லை, ஒரு கில்லர்": டிரம்ப்

பிரதமர் மோடியின் ஆளுமையைக் குறித்துப் பெருமிதமாகப் பேசிய டொனால்ட் டிரம்ப், "பிரதமர் மோடியைப் போல நான் எப்போதும் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்கக் கூடியவன் அல்ல. அவரைப் பாருங்கள், அவர் மிகவும் அமைதியானவர், ஆனால் காரியத்தைச் சாதிப்பதில் ஒரு 'டோட்டல் கில்லர்'!" என்று நகைச்சுவையாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் குறிப்பிட்டார். கடந்த மாதம் புது தில்லியில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பங்கேற்ற நேரடி நிகழ்வின் போது, அமெரிக்காவில் இருந்து போன் காலில் பேசிய டிரம்ப், தான் பிரதமர் மோடியின் "பெரிய ரசிகன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement