Loading...
இன்றிரவு தொடங்கும் அமெரிக்க தேர்தல்: டிரம்ப்பின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடைத்தேர்தல் 2026
அமெரிக்காவில் நவம்பர் 3 செவ்வாய்க்கிழமை தொடங்கும் இடைத்தேர்தல்

இன்றிரவு தொடங்கும் அமெரிக்க தேர்தல்: டிரம்ப்பின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடைத்தேர்தல் 2026

எழுதியவர் Venkatalakshmi V
Nov 02, 2026
04:38 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் நவம்பர் 3 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இடைத்தேர்தல், அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்தலாக உருவெடுத்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் மீதி இரண்டாண்டுகள், அவருக்கு சாதகமான காங்கிரஸுடன் அமையுமா அல்லது பின்னடைவையா சந்திக்குமா என்பதை இத்தேர்தல் தீர்மானிக்கவுள்ளது. இந்திய நேரப்படி புதன்கிழமை (நவம்பர் 4) அதிகாலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், இத்தேர்தல் குறித்து அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள்:

தேர்தல்

நாடாளுமன்றம் மட்டுமல்ல; மாநில அரசுகளுக்கும் தேர்தல்

பிரதிநிதிகள் சபையின் 435 தொகுதிகளுக்கும் முழுமையாக தேர்தல் நடைபெறுகிறது.

மேலவையான செனட்டில் காலியாக உள்ள 35 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில் துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ் மற்றும் வெளியுறவு செயலாளராக மார்கோ ரூபியோ பொறுப்பேற்றதால் காலியான ஓஹியோ, புளோரிடா தொகுதிகளும் அடங்கும்.

மேலும் 36 மாநிலங்களில் ஆளுநர்களுக்கான தேர்தலும் நடைபெறுகிறது.

இடைத்தேர்தலில் அதிபரின் பெயர் நேரடியாக வாக்குச்சீட்டில் இடம்பெறாவிட்டாலும், இத்தேர்தல் அவரது நிர்வாகத்தின் மீதான மதிப்பீடவே பார்க்கப்படுகிறது.

கருத்துக்கணிப்பில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு 44% ஆதரவும், குடியரசுக் கட்சிக்கு 36% ஆதரவும் கிடைத்துள்ளது.

தற்போது குடியரசுக் கட்சியிடம் 218-214 என்ற குறைந்தபட்ச பெரும்பான்மையே உள்ளது.

சமீபத்திய கணிப்புகளின்படி ஜனநாயகக் கட்சி 227 முதல் 240 இடங்களை பிடித்து பிரதிநிதிகள் சபையை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக்கூறப்படுகிறது.

செனட் சபை

செனட் சபை: 4 இடங்களை கைப்பற்ற துடிக்கும் ஜனநாயகக் கட்சி

தற்போது செனட்டில் குடியரசுக் கட்சி 53 - 47 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஜனநாயகக் கட்சி செனட்டை கைப்பற்ற கூடுதல் 4 இடங்களை வெல்ல வேண்டும்.

டெக்சாஸ், கேன்சாஸ் மற்றும் ஐயோவா போன்ற வழக்கமான குடியரசுக் கட்சி கோட்டைகளிலும் கடுமையான போட்டி நிலவுகிறது.

அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையே தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும்.

ஆனால் இம்முறை தேர்தல் நெருக்கத்தில் டெக்சாஸ், புளோரிடாவில் குடியரசுக் கட்சியினரும், கலிபோர்னியாவில் ஜனநாயக கட்சியினரும் தங்களுக்கு சாதகமாக தொகுதி எல்லைகளை மாற்றியமைத்துள்ளனர்.

ரிபப்ளிகன் கட்சி கோட்டைகளில் பின்னடைவு ஏற்படுவதற்கு தொடர் விலைவாசி உயர்வு மற்றும் ஈரான் மீதான போரே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 90% பேர் பணவீக்கத்தையே தங்களது பிரதான பிரச்சனையாகக் கருதுகின்றனர்.

ADVERTISEMENT

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள் எப்போது தெரியும்?

அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்வை தீர்மானிக்கும் 36 மாநில ஆளுநர் பதவிகளில் 15 இடங்களில் தற்போதைய ஆளுநர்கள் மீண்டும் போட்டியிட முடியாத நிலை உள்ளதால், ஆளுநர் தேர்தல்களிலும் கடுமையான போட்டி நிலவுகிறது.

அமெரிக்கக் கிழக்கு நேரப்படி செவ்வாய் மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நிறைவடையும் (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4:30 மணி).

அலாஸ்கா போன்ற மாநிலங்களில் தரவரிசை வாக்கு முறை பின்பற்றப்படுவதாலும், தபால் வாக்குகளை எண்ண நேரமாவதாலும் இறுதி முடிவுகள் முழுமையாக தெரிய சில நாட்கள் ஆகலாம்.

ADVERTISEMENT