
கடந்த ஆண்டில் மட்டும் 1.24 லட்சம் மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் 2022ஆம் ஆண்டில் 1,25,000 மாணவர் விசாக்களை வழங்கி சாதனை படைத்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நேற்று(ஜன:5) தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் நடக்கும் விசா நேர்காணல் காத்திருப்பு நேரத்தையும் விரைவில் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார்.
அப்படி தாமதங்கள் ஏற்பட்ட போதிலும், 2016ஆம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக 2022ஆம் நிதியாண்டில் அதிக மாணவர் விசாக்களை அமெரிக்கா வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், விசா செயலாக்கம் திட்டமிடப்பட்டதை விட வேகமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது என்றார்.
அமெரிக்கா
நெட் பிரைஸ் கூறிய பிற தகவல்கள்:
செய்தியாளரின் ஒரு கேள்விக்கு பதிலளித்த பிரைஸ், நீண்ட நேரம் காத்திருப்பவர்களின் விரக்தி அவருக்கு நன்றாக புரிவதாக கூறினார்.
"அந்தப் தாமதத்தை குறைக்கவும். பின், காத்திருப்பு நேரத்தை மொத்தமாக குறைக்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம். இடம்பெயராத பயணிகளுக்கு அவர்களது பயணத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல் தேசிய பாதுகாப்பையும் கணக்கில் கொள்வது எங்களது கடமை" என்றும் அவர் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், மக்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கான வாய்ப்புகளைத் தேடுவதாலும் விசா சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.