LOADING...
அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ஈரான்; ஹார்முஸ் நீரினை திறக்கப்படும் எனவும் அறிவிப்பு
ஹார்முஸ் நீரினை திறக்கப்படும் என ஈரான் அறிவிப்பு

அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ஈரான்; ஹார்முஸ் நீரினை திறக்கப்படும் எனவும் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2026
06:36 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிவதற்கான முக்கிய அறிகுறியாக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்க உள்ளது. பல வாரங்களாகத் நீடித்து வந்த மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வர, இரு நாடுகளும் இரண்டு வார காலப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளன. இதனை அமெரிக்காவும், ஈரானும் அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளன.

பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையும் 10 அம்சத் திட்டமும்

பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஈரான் வழங்கிய 10 அம்சங்கள் கொண்ட முன்மொழிவுத் திட்டத்தின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள இந்த அமர்வில், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 15 நாட்கள் நீடிக்கும் என்றும், தேவைப்பட்டால் இருதரப்பு சம்மதத்துடன் கால நீட்டிப்பு செய்யப்படும் என்றும் ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹார்முஸ் நீரிணை

ஹார்முஸ் நீரிணை திறப்பும் போர் நிறுத்தமும்

ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், தங்களின் தற்காப்பு நடவடிக்கைகளைத் தாங்கள் நிறுத்திக் கொள்ளத் தயார் என்று ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த இரண்டு வார காலத்திற்கு ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. எவ்வாறாயினும், "இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம் என்பது போரின் முடிவல்ல; தங்களின் கைகள் எப்போதும் துப்பாக்கியின் விசை (Trigger) மீதே இருக்கும்" என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில், ஈரான் ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறந்த பின்னரே இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

புதிய தலைமை

ஈரானின் புதிய தலைமை

ஈரானின் மறைந்த தலைவர் அயதுல்லா காமேனிக்குப் பிறகு பொறுப்பேற்றுள்ள அவரது மகன் மொஜ்தபா காமேனி, இந்த இரண்டு வார காலப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்பதால், சீனா இந்த விவகாரத்தில் தலையிட்டு ஈரானை நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுமாறு வலியுறுத்தியது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்டு முயற்சியால் இந்தத் தற்காலிக அமைதி ஏற்பட்டுள்ளது. இந்தத் திடீர் ராஜதந்திர நகர்வு மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement