LOADING...
ட்ரம்ப்பின் அதிரடித் திருப்பம்: 2 வார போர் நிறுத்தம் அறிவிப்பு
மத்திய கிழக்கில் 2 வார போர் நிறுத்தம் அறிவிப்பு

ட்ரம்ப்பின் அதிரடித் திருப்பம்: 2 வார போர் நிறுத்தம் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2026
06:16 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, ஒரு மிகப்பெரிய அழிவு நிகழப்போவதாக அஞ்சப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது தாக்குதல் முடிவை தற்காலிகமாகத் தள்ளிவைப்பதாக அறிவித்து உலக நாடுகளை நிம்மதியடையச் செய்துள்ளார். ஈரானுடனான பதற்றத்தைத் தணிக்கவும், ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கவும் இந்த இரண்டு வார காலப் போர் நிறுத்த முடிவை அவர் எடுத்துள்ளார். 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,"ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் ராணுவத் தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த முடிவை எடுப்பதற்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடன் நடத்திய உரையாடல்களே முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

போர் நிறுத்தம்

ஹார்முஸ் நீரிணை மற்றும் நிபந்தனையுடனான போர் நிறுத்தம்

திட்டமிடப்பட்ட தாக்குதல்களைத் தள்ளிவைக்குமாறு பாக்கிஸ்தான் பிரதமரும், ராணுவ தளபதியும் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஒரு மிகப்பெரிய போரைத் தவிர்க்க ட்ரம்ப் முன்வந்துள்ளார். எனினும், இந்த இரண்டு வார காலப் போர் நிறுத்தம் என்பது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பாக, ஈரான் உடனடியாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் பிரதான நிபந்தனையாக உள்ளது. இதனை "இருதரப்பு போர் நிறுத்தம்" (Double sided CEASEFIRE) என்று வர்ணித்துள்ள அவர், இரு நாடுகளும் இந்த இடைவெளியைப் பயன்படுத்திப் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது உலகளாவிய எரிசக்தி விநியோகச் சீர்குலைவைத் தவிர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அமைதிப் பேச்சுவார்த்தை

ஈரானின் 10 அம்சத் திட்டம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை

ஈரான் தரப்பிலிருந்து 10 அம்சங்களைக் கொண்ட ஒரு முன்மொழிவு (10 point proposal) வாஷிங்டனுக்குக் கிடைத்துள்ளதாக ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இது ஒரு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக அமையும் என்றும், ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். "நாங்கள் ஏற்கனவே அனைத்து ராணுவ இலக்குகளையும் எட்டிவிட்டோம், நீண்டகால அமைதிக்கான ஒரு திட்டவட்டமான ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டோம்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளது, மத்திய கிழக்கில் ஒரு புதிய விடியலுக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் இந்தப் போரில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஐநா சபை,போப்பாண்டவர் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் கண்டனங்களுக்கு மத்தியிலும், ட்ரம்ப்பின் இந்தத் திடீர் மனமாற்றம் ஒரு மிகப்பெரிய பேரழிவைத் தடுத்துள்ளது.

Advertisement