Loading...
பிக்ஃபூட் மர்ம உயிரினம் உண்மையா? 15 அடி விலங்கின் கால்தட ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க வனத்துறை
15 அடி பிக்ஃபூட் மர்ம விலங்கின் கால்தட ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க வனத்துறை

பிக்ஃபூட் மர்ம உயிரினம் உண்மையா? 15 அடி விலங்கின் கால்தட ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க வனத்துறை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 23, 2026
02:08 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க வனத்துறை தனது பொது ஆவணக் காப்பகத்தில் மர்ம உயிரினமான பிக்ஃபூட் தொடர்பான பழைய அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. கனடாவின் ஒன்டாரியோ கிராமப்புற மக்கள் ராட்சத உருவங்களை நேரில் பார்த்ததாகக் கூறிய சில மாதங்களுக்குப் பிறகு இந்த ஆவணங்கள் வெளிவந்துள்ளன. மொன்டானா மற்றும் ஓரிகான் காடுகளில் கண்டறியப்பட்ட விசித்திரமான கால்தடங்கள் மற்றும் நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது உலகெங்கிலும் உள்ள மர்ம உயிரின ஆய்வாளர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

ஓரிகான் வனப்பகுதி

1982 ஆம் ஆண்டு ஓரிகான் வனப்பகுதியில் கண்டறியப்பட்ட மர்ம கால்தட ஆய்வு

புதிதாக வெளியிடப்பட்ட 1982 ஆம் ஆண்டு அறிக்கையில் வனவிலங்கு உயிரியலாளர் ரோட்னி ஜான்சன் வடகிழக்கு ஓரிகானில் உள்ள கால்தடங்களை ஆய்வு செய்த விவரங்கள் உள்ளன.

உமடில்லா தேசிய வனப்பகுதியின் மூன்று இடங்களில் காணப்பட்ட அந்தத் தடங்களில் இரண்டை அவர் பிளாஸ்டர் அச்சுகளாகப் பதிவு செய்தார்.

சரிவுகளிலும் கால்தடங்களின் இடைவெளி மாறாமல் இருப்பது உள்ளிட்ட எட்டு காரணங்களைக் கூறி அவை பிக்ஃபூட் தடங்கள் அல்ல என ஜான்சன் கருதினார்.

பின்னர் வந்த வனத்துறை அறிக்கையும் இது ஒரு புத்திசாலித்தனமான ஏமாற்று வேலை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.

1980 ஆம் வருடம்

1980 ஆம் ஆண்டு மொன்டானா காட்டில் எல்க் மானை இழுத்து சென்ற மர்ம உயிரினம்

1980 ஆம் ஆண்டு மொன்டானாவை சேர்ந்த லியோ கின்னி எழுதிய வாக்குமூலம் ஒரு திகில் நாவல் போல அமைந்துள்ளது.

அவரும் மூன்று நண்பர்களும் இறந்த எல்க் மானை எடுக்கக் காட்டுக்குள் சென்றபோது இரண்டு கால்களால் நடக்கும் மர்ம உயிரினத்தின் தடங்களைக் கண்டனர்.

அந்த உயிரினத்தை நேரில் பார்க்காவிட்டாலும் அதன் கடுமையான துர்நாற்றத்தையும் உறுமல் சத்தத்தையும் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மர்ம உயிரினம் எல்க் மானை இழுத்து சென்றதை அறிந்ததும் முதுகுத்தண்டு சில்லிடும் அச்சத்துடன் அங்கிருந்து திரும்பியதாக அவர் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

கிராமத்து சாட்சியங்கள்

2003 மொன்டானா செய்தித்தாள் அறிக்கை மற்றும் ஒன்டாரியோ கிராமத்து சாட்சியங்கள்

2003 ஆம் ஆண்டு மொன்டானாவில் வெளியான செய்தித்தாள் அறிக்கையில் நூற்றுக்கணக்கான விசித்திரமான கால்தடங்களை மக்கள் கண்டறிந்ததாக கூறப்பட்டுள்ளது.

தடங்களை நேரில் பார்க்கும் வரை நான் அதை நம்பவில்லை என அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வியப்புடன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த ஜூன் மாதம் கனடாவின் ஒன்டாரியோ கிராமத்தில் குப்பைத் தொட்டிகளில் உணவைத் தேடிய இரண்டு மர்ம உயிரினங்களை மக்கள் பார்த்துள்ளனர்.

அவற்றில் ஒன்று பெரியதாகவும் மற்றொன்று இலவங்கப்பட்டை நிறத்தில் சற்று சிறியதாகவும் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர்.

ADVERTISEMENT

அறிவியல் ஆதாரம் இல்லை

அறிவியல் ஆதாரம் இல்லாத நிலையிலும் 16,000-க்கும் மேற்பட்ட பதிவுகள்

இரண்டு கால்களால் நடக்கும் குரங்கு போன்ற பிக்ஃபூட் உயிரினம் இருப்பதற்கான அறிவியல் ஆதாரம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும் பிக்ஃபூட் மேப்பிங் ப்ராஜெக்ட் அமைப்பில் இந்த மர்ம உயிரினம் குறித்த பதினாறாயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.

உறுதிப்படுத்தப்படாத விஷயங்களைக் கண்டறியும் ஆர்வம் மனிதர்களுக்கு எப்போதுமே உற்சாகத்தைத் தருவதாகப் பேராசிரியர் ஜோஷ் ரெட்ஸ்டோன் கூறுகிறார்.

புதியதாக ஏதேனும் ஒன்றைக் கண்டுபிடித்து விடுவோம் என்ற எதிர்பார்ப்பே மக்களை இந்த மர்மத்தை நோக்கி ஈர்க்கிறது.

ADVERTISEMENT