NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்கர்களுக்கு மகத்தான வெற்றி: புளோரிடா பேரணியில் டிரம்ப் நன்றியுரை
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்கர்களுக்கு மகத்தான வெற்றி: புளோரிடா பேரணியில் டிரம்ப் நன்றியுரை
    புளோரிடா பேரணியில் டிரம்ப் நன்றியுரை

    அமெரிக்கர்களுக்கு மகத்தான வெற்றி: புளோரிடா பேரணியில் டிரம்ப் நன்றியுரை

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 06, 2024
    01:27 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முக்கியமான போர்க்கள மாநிலங்களில் தீர்க்கமான வெற்றிகளைப் பெற்ற பின்னர், வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்பதற்கு நெருக்கத்தில் உள்ளார்.

    ட்ரம்பின் வெற்றியை கொண்டாடும் வகையில் புளோரிடாவில் ஆரவாரம் செய்த கூட்டத்தினருக்கு அதிகாலையில் உரையாற்றிய டிரம்ப், நாடு முழுவதும் தனக்கு கிடைத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

    "அமெரிக்கா எங்களுக்கு முன்னோடியில்லாத மற்றும் சக்திவாய்ந்த ஆணையை வழங்கியுள்ளது," என்று அவர் பாம் பீச் கவுண்டி கன்வென்ஷன் சென்டரில் ஆதரவாளர்களிடம் கூறினார், இது "அமெரிக்கர்களுக்கு ஒரு அற்புதமான வெற்றி" என்றும் கூறினார்.

    "இதுவரை பார்த்திராத அரசியல் வெற்றி" என்று அவர் விவரித்ததைக் கொண்டாடிய டிரம்ப், முடிவுகள் தனக்கு "மிகப்பெரிய அன்பின் உணர்வை" அளித்ததாகக் கூறினார்.

    embed

    Twitter Post

    The people of America gave @realDonaldTrump a crystal clear mandate for change tonight— Elon Musk (@elonmusk) November 6, 2024

    வாக்கு வித்தியாசம்

    இரு போட்டியாளர்களுக்கு இடையே உள்ள வாக்கு வித்தியாசம்

    தற்போது, ​​டொனால்ட் டிரம்ப் 267 தேர்தல் வாக்குகள் பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது, ஆட்சியமைக்க தேவையான 270 இல் இன்னும் மூன்று வாக்குகள் மட்டுமே பாக்கி.

    மறுபுறம் தற்போதைய துணைத் தலைவரான கமலா ஹாரிஸ் 214 தேர்தல் வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.

    குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப், மிகவும் போட்டி நிறைந்த அமெரிக்க தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியின் எதிராளியான ஹாரிஸை தோற்கடித்து, வெள்ளை மாளிகைக்குத் திரும்பத் தயாராகிவிட்டார்.

    அமெரிக்க நெட்வொர்க் கணிப்புகளின்படி, பென்சில்வேனியா உட்பட, ஸ்விங் மாநிலங்களின் ஸ்வீப் மூலம் ட்ரம்பின் வாய்ப்புகள் பலப்படுத்தப்பட்டன.

    இதற்கிடையில், ஹாரிஸ் கலிபோர்னியாவை வென்றார், இது மிகப்பெரிய தேர்தல் பரிசு- அவரது மொத்த எண்ணிக்கையை 214 ஆக உயர்த்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமெரிக்கா

    3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
    வோல்டேஜ் ரெகுலேட்டர் கோளாறு காரணமாக 42,000 மோட்டார் சைக்கிள்களை திரும்ப பெறும் ஹார்லி-டேவிட்சன் ஹார்லி-டேவிட்சன்
    அமெரிக்காவில் இந்து கோவில் சேதம்; 'இந்துக்களே திரும்பிச் செல்லுங்கள்' என்ற வாசகத்தால் பரபரப்பு உலகம்
    அமெரிக்கா தேர்தல்: கமலா ஹாரிஸ் முன்னிலை என கருத்துக்கணிப்புகள் தகவல்  கமலா ஹாரிஸ்

    டொனால்ட் டிரம்ப்

    டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: அவரது வலது காதை குண்டு துளைத்தது  அமெரிக்கா
    டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் யார் தெரியுமா? அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவரின் புகைப்படம் வெளியீடு  அமெரிக்கா
    தாக்குதல் நடத்தியவர் டொனால்ட் டிரம்பிற்கு அருகே சென்றது எப்படி? அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025