LOADING...
ஈரானுக்கு எதிராகத் தரைவழித் தாக்குதலா? 3,500 வீரர்கள், எஃப்-35 ஜெட் விமானங்களுடன் களமிறங்கிய அமெரிக்க போர்க்கப்பல்
3,500 கடற்படை வீரர்களுடன் மத்திய கிழக்கு சென்றடைந்த அமெரிக்காவின் யுஎஸ்எஸ் திரிப்போலி

ஈரானுக்கு எதிராகத் தரைவழித் தாக்குதலா? 3,500 வீரர்கள், எஃப்-35 ஜெட் விமானங்களுடன் களமிறங்கிய அமெரிக்க போர்க்கப்பல்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 29, 2026
08:45 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்கா தனது ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், யுஎஸ்எஸ் திரிப்போலி என்ற நவீன ரக ஆம்பிபியஸ் அஸால்ட் போர்க்கப்பலையும், சுமார் 3,500 கடற்படை வீரர்களையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. மார்ச் 27, 2026 அன்று இந்த வீரர்கள் அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் பகுதிக்கு வந்து சேர்ந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலம்

நவீன யுஎஸ்எஸ் திரிப்போலி மற்றும் அதன் பலம்

ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கி வந்த யுஎஸ்எஸ் திரிப்போலி, அமெரிக்க கடற்படையின் மிகவும் நவீனமான கப்பல்களில் ஒன்றாகும். இது அதிநவீன எஃப்-35 லைட்டனிங் II போர் விமானங்களை இயக்கும் திறன் கொண்டது. இக்கப்பலில் 3,500 வீரர்கள் மட்டுமன்றி, போக்குவரத்து மற்றும் தாக்குதல் விமானங்களும், தரை மற்றும் கடல் என இருவழிகளிலும் தாக்கும் போர் தளவாடங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள நிமிட்ஸ் மற்றும் ஃபோர்டு ரக அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பல்களுடன் தற்போது இந்த யுஎஸ்எஸ் திரிப்போலியும் இணைந்துள்ளது.

தரைவழி தாக்குதல்

ஈரான் மீது தரைவழித் தாக்குதலுக்குத் திட்டமா?

அமெரிக்கா திடீரென இவ்வளவு வீரர்களைக் குவிப்பது, ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான ஒரு முன்னோட்டமாக இருக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையின்படி, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளில் அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் கூடுதல் வாய்ப்புகளை வழங்கவே இந்த வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவு அருகே இந்த வீரர்கள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், தரைப்படை வீரர்களை நேரடியாகப் போரில் ஈடுபடுத்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement

போரின் தீவிரம்

ஆபரேஷன் எபிக் ஃபியூரி

கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று தொடங்கிய ஆபரேஷன் எபிக் ஃபியூரி மூலம் அமெரிக்கா ஈரானின் 11,000க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளது. இதில் ஈரானின் புரட்சிகர காவல்படை முகாம்கள், ஏவுகணைத் தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுதத் தொழிற்சாலைகள் அடங்கும். மேலும், ஈரானின் சுமார் 150 போர்க்கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் தெரிவித்துள்ளது. வான்வழித் தாக்குதல்கள் ஒருபுறம் நடந்தாலும், கூடுதல் துருப்புக்களின் வருகை போரின் தீவிரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

Advertisement

அமெரிக்கப் படை

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அமெரிக்கப் படை

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கனவே சுமார் 50,000 அமெரிக்க வீரர்கள் பணியில் உள்ளனர். தற்போது வந்துள்ள 3,500 வீரர்கள் இந்தப் படைக்கு மேலும் வலுசேர்ப்பார்கள். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்களுடன் இந்த வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், மறுபுறம் அமெரிக்காவின் இந்த ராணுவக் குவிப்பு, ஈரான் மீதான அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேசப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement