Loading...
கௌதம் அதானி மீதான லஞ்ச வழக்கு தள்ளுபடி: அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய தீர்ப்பு
கௌதம் அதானி மீதான லஞ்ச வழக்கு தள்ளுபடி

கௌதம் அதானி மீதான லஞ்ச வழக்கு தள்ளுபடி: அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய தீர்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 11, 2026
09:39 am

செய்தி முன்னோட்டம்

இந்திய பணக்காரர்களுள் ஒருவரான கௌதம் அதானி மீது தொடரப்பட்டிருந்த லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக அமெரிக்க நீதித் துறை அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த வழக்கை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நியூயார்க்கின் புரூக்ளின் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராஃபிஸ், அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தார். வழக்கை கைவிடுவதற்கான காரணங்களை ஆராய்ந்த நீதிபதி, அமெரிக்காவில் $10 பில்லியன் முதலீடு செய்வதாக அதானி அளித்த வாக்குறுதி இந்த முடிவில் செல்வாக்கு செலுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் இந்த உத்தரவை வழங்கினார்.

கண்டனம்

நீதித் துறையின் செயல்பாட்டிற்கு நீதிபதி கண்டனம்

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் கருத்துக்களை பெறாமல், அமெரிக்க நீதித்துறை அதிகாரி டிரென்ட் மெக்கட்டர் வழக்கு நீக்க முடிவை எடுத்த முறை கவலையளிப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கு வெளிநாட்டு விவகாரங்கள் சார்ந்தது என்றும், குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது கடினம் என்பதாலேயே வழக்கைக் கைவிட்டதாக நீதித் துறை தெரிவித்தது.

நீதிமன்றத் தீர்ப்பு குறித்துச் சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்த கௌதம் அதானி, அமெரிக்க நீதிமன்றத்தின் முடிவைப் பணிவுடனும் நீதித்துறை மீதான ஆழ்ந்த மரியாதையுடனும் வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்தின் சிவில் வழக்குகளுக்குத் தீர்வாக அதானி $6 மில்லியனும், அவரது மருமகன் சாகர் அதானி $12 மில்லியனும் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT