Loading...
ஐடி துறையினருக்கு மாபெரும் நிம்மதி! $100,000 H-1B விசா கட்டணத்தை ரத்து செய்த நீதிமன்றம்! டிரம்ப் அரசிற்கு பலத்த பின்னடைவு
$1,00,000 H-1B விசா கட்டணம்

ஐடி துறையினருக்கு மாபெரும் நிம்மதி! $100,000 H-1B விசா கட்டணத்தை ரத்து செய்த நீதிமன்றம்! டிரம்ப் அரசிற்கு பலத்த பின்னடைவு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 25, 2026
08:46 am

செய்தி முன்னோட்டம்

புதிய H-1B விசாக்களைப் பெறும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு $100,000 (சுமார் ₹83 லட்சம்) கட்டணம் விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கீழ் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி ட்ரம்ப் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை பாஸ்டன் நகரில் உள்ள 1-வது அமெரிக்க சுற்றமைப்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதம்

சட்டவிரோத வரி என நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

முன்னதாக 20 ஜனநாயகக் கட்சி மாநில அட்டர்னி ஜெனரல்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விதிக்கப்பட்ட இந்தக் கட்டணம் ஒரு சட்டவிரோதமான வரி எனக் கூறி ஜூன் 8 அன்று அதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

தற்போது மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசாங்கம் தனது அதிகாரத்தைத் தாண்டவில்லை என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டி கீழ் நீதிமன்றத்தின் தடையை நீக்க மறுத்துவிட்டது.

நிம்மதி

தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இந்தியர்களுக்குப் பெரும் நிம்மதி

தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் திறமையான பணியாளர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வர H-1B விசாவையே பெரிதும் சார்ந்துள்ளன.

வழக்கமாக ஒரு H-1B விசா பெற $2,000 முதல் $5,000 வரை மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் அதைக் கடுமையாக உயர்த்தியது.

அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளைப் பாதுகாப்பதாகக் கூறி கொண்டுவரப்பட்ட இந்த $1,00,000 கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு மாபெரும் ஆறுதலை அளித்துள்ளது.

ADVERTISEMENT

சிக்கல்

கட்டண உயர்வும் நடைமுறை சிக்கல்களும்

அமெரிக்கா ஆண்டிற்கு 65,000 வழக்கமான H-1B விசாக்களையும், உயர் கல்வி படித்தவர்களுக்காகக் கூடுதல் 20,000 விசாக்களையும் வழங்கி வருகிறது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடிக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களே இந்தக் கட்டணத்தை செலுத்தியிருந்தன.

மேலும் அமெரிக்காவில் ஏற்கனவே மாணவர் விசாவில் தங்கியிருந்து H-1B விசாவுக்கு மாறும் நபர்களுக்கு இந்த $100,000 கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT