அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ரகசிய பேச்சுவார்த்தை: போரை தவிர்க்க தீவிர முயற்சி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் தேர்தலின் இடைக்கால முடிவுகளுக்குப் பிறகு, ஈரானுடன் மீண்டும் நேரடிப் போர் வெடிப்பதைத் தவிர்க்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. அணுசக்தித் திட்டம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களைத் தவிர்ப்பது சாத்தியமே என அதிபர் டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த சமரசப் பேச்சுவார்த்தைகளை கத்தார் நாடு தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறது.
நிலைப்பாடுகள்
இடைக்காலத் தேர்தல் முடிவுகள்
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு ஈரான் மீதான போரும் ஒரு காரணம் எனத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஈரான் தனது கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
அதேவேளையில், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் இன்னும் முழுமையான உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், ஈரானின் நிபந்தனைகள் ஏற்க முடியாத அளவில் உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
முக்கியக் கோரிக்கைகலினக்ஸ்
அணு ஆயுதங்களை உருவாக்கும் ஈரானின் திறனை முழுமையாகக் கட்டுப்படுத்த அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
மறுபுறம், தன் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது, முடக்கப்பட்ட நிதியை விடுவிப்பது மற்றும் கடல்சார் முற்றுகையை விலக்கிக் கொள்வது ஆகிய நிபந்தனைகளை ஈரான் முன்வைக்கிறது.
மேலும் ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான தனது கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க ஈரான் தயங்குவதால், இருதரப்பிலும் உடன்பாடு எட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
எனினும், முழு அளவிலான மோதலைத் தவிர்க்க இருதரப்பும் விரும்புவதால் இராஜீய முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.