Page Loader
உருகுவே நாட்டின் முன்னாள் உலக அழகி போட்டியாளர் 26 வயதில் மரணம் 
உருகுவே நாட்டின் முன்னாள் உலக அழகி போட்டியாளர் இளம் வயதில் மரணம்

உருகுவே நாட்டின் முன்னாள் உலக அழகி போட்டியாளர் 26 வயதில் மரணம் 

எழுதியவர் Nivetha P
Oct 16, 2023
04:44 pm

செய்தி முன்னோட்டம்

உருகுவே நாட்டின் உலக அழகி போட்டியில் கடந்த 2015ம்-ஆண்டு பங்கேற்றவர் ஷெரிகா டி அர்மாஸ். 26 வயதாகும் இவர் புற்றுநோய் பாதிப்பால் அவதியடைந்துள்ளார். ரேடியோதெரபி, கீமோதெரபி போன்ற சிகிச்சைகளையும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி கடந்த 13ம்.,தேதி இவர் மரணமடைந்துள்ளார். தனது இளம்வயதில் இப்பெண் உயிரிழந்த சம்பவம் உருகுவே மட்டுமின்றி உலகநாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, இதுகுறித்து உருகுவே நாட்டின் உலக அழகி கர்லா ரோமிரோ, 'நான் எனது வாழ்வில் இதுவரை சந்தித்த அழகிய பெண்களில் ஷெரிக்காவும் ஒருவர்' என்று கூறியுள்ளார். மேலும், இவரின் மறைவு குறித்து ஷெரிகாவின் சகோதரரான மெய்க்-டி-அர்மாஸ், 'சிறிய சகோதரியே உயரே செல்லவும், என்றென்றும், எப்போதும்' என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.