Loading...
500 ஆண்டுகால வரைபட வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி! ஆப்பிரிக்காவின் உண்மையான அளவை வெளியிட ஐநாவில் வாக்கெடுப்பு
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவை வெளியிட ஐநாவில் வாக்கெடுப்பு

500 ஆண்டுகால வரைபட வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி! ஆப்பிரிக்காவின் உண்மையான அளவை வெளியிட ஐநாவில் வாக்கெடுப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2026
03:00 pm

செய்தி முன்னோட்டம்

பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் உலக வரைபடத்திற்குப் பதிலாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான பரப்பளவைத் துல்லியமாகக் காட்டும் புதிய உலக வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்பது குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) முக்கிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஆப்பிரிக்க யூனியனின் 54 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் டோகோ நாடு இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

குறைபாடு

500 ஆண்டுகால மெர்கேட்டர் வரைபடத்தின் குறைபாடுகள்

தற்போது பயன்பாட்டில் உள்ள மெர்கேட்டர் வரைபடம் 1569 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் கெரார்டஸ் மெர்கேட்டர் என்பவரால் மாலுமிகளின் கடல் பயணத்திற்காக உருவாக்கப்பட்டது.

இந்த வரைபடத்தில் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பகுதிகள் சிறியதாகவும், துருவப் பகுதிகள் மிக பெரியதாகவும் காட்டப்படுகின்றன.

உதாரணத்திற்கு, இந்த வரைபடத்தில் கிரீன்லாந்தும் ஆப்பிரிக்காவும் ஒரே அளவில் காட்சியளிக்கும்.

ஆனால் உண்மையில் ஆப்பிரிக்கா கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கொண்டதாகும்.

வடிவமைப்பு

வரைபட காலனித்துவமும் ஈக்வல் எர்த் வடிவமைப்பும்

பழைய வரைபடம் மேலை நாடுகளின் ஆதிக்கத்தை மறைமுகமாக உயர்த்திக் காட்டி, தெற்கு அரைக்கோள நாடுகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகக் வரலாற்று ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த தவறான பிம்பத்தை மாற்றுவதற்காகக் கார்டோகிராஃபர்களால் 2018 இல் உருவாக்கப்பட்ட ஈக்வல் எர்த் (Equal Earth) என்ற துல்லியமான வரைபடத்தைப் பயன்படுத்தத் டோகோவின் #CorrectTheMap பிரச்சாரம் வலியுறுத்துகிறது.

ஆப்பிரிக்கக் கண்டத்திற்குள் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதியை அடக்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

வாக்கெடுப்பு

ஐநா வாக்கெடுப்பும் உலகளாவிய பாடத்திட்ட மாற்றங்களும்

இந்த ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது உலக நாடுகளின் பள்ளிப் பாடத்திட்டங்கள், அரசு ஆவணங்கள் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற டிஜிட்டல் தொழில் நுட்பங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

வரும் ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை உலகம் சரியாகப் புரிந்துகொள்ள இந்த புதிய வரைபடம் உதவும் என சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT