உக்ரைன்- ரஷ்யா அமைதி திட்டம் "கிட்டத்தட்ட 95 சதவீதம்" நிறைவு: டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெற்றது. ரஷ்யா - உக்ரைன் போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதே இந்த சந்திப்பின் முதன்மையான நோக்கமாக இருந்தது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு தரப்புக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைக் காண்பதில் டிரம்ப் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் "கிட்டத்தட்ட 95 சதவீதம்" நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார், ஆனால் பிரதேசம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள், குறிப்பாக கிழக்கு உக்ரைனில் நிலம் தொடர்பானவை தீர்க்கப்படாமல் உள்ளன என்று எச்சரித்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் உடன் இருந்தததாக தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Along with several other European leaders, I took part this evening in an exchange with Presidents @ZelenskyyUa and @realDonaldTrump. I then spoke with President Zelensky.
— Emmanuel Macron (@EmmanuelMacron) December 29, 2025
We are making progress on the security guarantees that will be central to building a just and lasting…
உக்ரைன்
பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியின் நிலைப்பாடு
"ஒரு சிறந்த சந்திப்புக்கு டொனால்ட் டிரம்பிற்கு நான் நன்றி கூறுகிறேன். அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் ஒரு விரிவான விவாதத்தை நடத்தினோம், மேலும் சமீபத்திய வாரங்களில் அமெரிக்க மற்றும் உக்ரைன் அணிகள் அடைந்த முன்னேற்றத்தை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்" என செலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். "சமாதான கட்டமைப்பின் அனைத்து அம்சங்களையும் நாங்கள் விவாதித்தோம், குறிப்பிடத்தக்க முடிவுகளை அடைந்தோம். மேலும் நடவடிக்கைகளின் வரிசையையும் நாங்கள் விவாதித்தோம். நீடித்த அமைதியை அடைவதற்கான பாதையில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் முக்கியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம், மேலும் எங்கள் குழுக்கள் அனைத்து அம்சங்களிலும் தொடர்ந்து பணியாற்றும்" என்றார். மேலும், வரும் ஜனவரி டிரம்ப் தலைமையில் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் கூடவுள்ளதாக தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
I thank @POTUS Donald Trump for a great meeting. We had a substantive discussion on all issues, and we much appreciate the progress achieved by American and Ukrainian teams in recent weeks. Special thanks to Steve Witkoff and Jared Kushner for their engagement and full… pic.twitter.com/cDAC2LFl6K
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) December 28, 2025