
இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் ஆழமான உறவு இருக்கிறது என்று இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் கிலெவெர்லி தெரிவித்திருக்கிறார்.
இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இங்கிலாந்தில் இருக்கும் அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
நேற்று, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டில்களையும் புகை மூட்டங்களையும் தூதரக கட்டிடத்தின் மேல் வீசி போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து, அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
லண்டன்
அம்ரித்பால் சிங்க்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்ததால் இந்திய தூதரகத்தில் தாக்குதல்
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால் போராட்டம் முறியடிக்கப்பட்டது.
காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்க்கு எதிரான நடவடிக்கைகள் பஞ்சாப்பில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
அதனை எதிர்த்து ஞாயிற்று கிழமை அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், தூதரகத்தின் பால்கனியில் ஏறி இந்திய கொடியை கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர்.
இதே போன்ற ஒரு சம்பவம் நேற்றும் நடந்திருக்கிப்பது இந்திய தூதரகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.