Page Loader
நடுவானில் மோதிக்கொண்ட இரு ஹெலிகாப்டர்கள்!
ஹெலிகாப்டர் விபத்து

நடுவானில் மோதிக்கொண்ட இரு ஹெலிகாப்டர்கள்!

எழுதியவர் Sindhuja SM
Jan 03, 2023
11:07 am

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்குநேராக மோதியதால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகணத்தின் தங்க கடற்கரையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இன்று அங்கு விடுமுறை தினம். அதனால், அந்த பகுதியில் இருக்கும் பூங்காவிற்கு நிறைய மக்கள் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில், இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் நெருக்குநேராக மோதி இருகிறது. ஒரு ஹெலிகாப்டர் மோதிய வேகத்தில் கடற்கரை மணலில் விழுந்தது. இன்னொரு ஹெலிகாப்டருக்கு முன் பகுதியில் மட்டுமே பலத்த அடி பட்டிருந்ததால், அதை சமாளித்து தரை இறக்கிவிட்டனர். இந்த நிகழ்வால்,அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர், காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ: