Page Loader
இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்- அமெரிக்காவில் சுவாரஸ்யம்

இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்- அமெரிக்காவில் சுவாரஸ்யம்

எழுதியவர் Srinath r
Jan 04, 2024
01:21 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் 40 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்களுக்கு, வெவ்வேறு நாட்கள், வெவ்வேறு மாதங்கள், என் பிறந்த ஆண்டுகள் கூட வெவ்வேறாக அமைந்த சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நியூ ஜெர்சியில் வசிக்கும் பில்லி ஹம்ப்ரி மற்றும் அவரது மனைவி ஈவ் ஆகியோர், புத்தாண்டுக்கு முந்தைய தினம் மற்றும் புத்தாண்டு அன்று இரட்டை மகன்களை வரவேற்றனர். அவர்களின் முதல் மகன் எஸ்ரா 31 ஆம் தேதி இரவு 11:48 மணிக்கு பிறந்த நிலையில், இரண்டாவது மகன் எசேக்கியேல் 40 நிமிடங்களுக்கு பின்னர், புத்தாண்டு அன்று அதிகாலை 12:28 மணிக்கு பிறந்தார். இந்த குழந்தைகளை இரட்டையர்கள் எனக்கூறி, அவர்களுக்கான ஆவணங்களை பெறுவது மிகவும் கடினமான பணியாக இருக்கும் என குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்தநாள் கொண்டாடும் இரட்டையர்கள்