LOADING...
ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வதே தெரியவில்லையாம்; சொல்கிறார் டொனால்ட் டிரம்ப்
ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வதே தெரியவில்லை என டொனால்ட் டிரம்ப் பேச்சு

ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வதே தெரியவில்லையாம்; சொல்கிறார் டொனால்ட் டிரம்ப்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 06, 2025
08:57 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்யாவிலிருந்து யுரேனியம் மற்றும் உரங்களை அமெரிக்கா தொடர்ந்து இறக்குமதி செய்து வருவதாக கூறியதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆச்சரியம் தெரிவித்தார். ரஷ்யாவுடனான அதன் தொடர்ச்சியான எண்ணெய் வர்த்தகம் குறித்து மேற்கத்திய விமர்சனங்களை எதிர்கொள்ள இந்தியா இதை கூறியிருந்த நிலையில், இதுகுறித்து டொனால்ட் டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், "எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. நான் அதை என்னவென்று பார்க்கிறேன்." என்று கூறினார். அமெரிக்கா ரஷ்யாவுடனான வர்த்தகம் குறித்து இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டிய இந்தியாவின் அறிக்கைக்கு பதிலளிகையில் அவர் இதை கூறினார்.

வெளியுறவுத் துறை

இந்திய வெளியுறவுத் துறை காட்டமான பதில்

இந்திய வெளியுறவுத்துறை (MEA) இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டிற்க்ய் ஒரு வலுவான மறுப்பை வெளியிட்டது. அதில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகள் குறித்த விமர்சனத்தை நியாயமற்றது என்று விமர்சித்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் அணுசக்திக்காக ரஷ்ய யுரேனியம், மின்சார வாகனங்களுக்கான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்களை இறக்குமதி செய்வதைத் தொடர்கின்றன என்றும், அதே நேரத்தில் வர்த்தகத்தை குறைக்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கின்றன என்றும் அப்போது எடுத்துக்காட்டியது. உலக சந்தைகளை நிலைப்படுத்த இந்தியா ரஷ்ய எரிசக்தி வாங்குவதை ஆதரித்ததையும் இந்தியா அமெரிக்காவிற்கு நினைவூட்டியது.

டிரம்ப்

டிரம்ப் புதிய வரிவிதிப்பு அச்சுறுத்தல்

இருப்பினும், டிரம்ப் இந்தியாவின் மீது அழுத்தத்தை அதிகரித்தார், 24 மணி நேரத்திற்குள் புதிய வரி விதிப்புகள் விதிக்கப்படலாம் என்று கூறினார். இது தற்போதைய 25 சதவீத விகிதத்திற்கு அப்பால் சாத்தியமான உயர்வுகளைக் குறிக்கிறது. ரஷ்யாவுடன் எரிசக்தி வர்த்தகத்தைத் தொடரும் சீனா போன்ற நாடுகள் மீதான மிகப்பெரிய அளவிலான வரிவிதிப்புகள் குறித்தும் அவர் சூசகமாக தெரிவித்தார். இதற்கிடையில், அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் புதன்கிழமை ரஷ்யத் தலைவர்களைச் சந்தித்து உக்ரைன் போருக்கு சாத்தியமான தீர்வு குறித்து விவாதிக்கவுள்ளார். வரிவிதிப்புகள் குறித்து உறுதியான முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவது ஒரு முதன்மையான முன்னுரிமையாகவே உள்ளது என்று டிரம்ப் வலியுறுத்தினார்.