LOADING...
விமான வர்த்தகப் போர்: கனடா மீது 50% வரி விதிக்க போவதாக டிரம்ப் மிரட்டல்
கனடா மீது 50% வரி விதிக்க போவதாக டிரம்ப் மிரட்டல்

விமான வர்த்தகப் போர்: கனடா மீது 50% வரி விதிக்க போவதாக டிரம்ப் மிரட்டல்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 30, 2026
09:09 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது வர்த்தக கோரிக்கைகளை முன்னெடுக்க அழுத்தம் கொடுக்கும் தந்திரமாக வரிகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். வியாழக்கிழமை, கியூபாவிற்கு எண்ணெய் விற்கும் அல்லது வழங்கும் நாடுகளின் பொருட்களுக்கு வரிகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். தற்போது தனது 'Truth Social' தளத்தில் கனடா அரசுக்கு எதிராக கடுமையான பொருளாதார மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். அமெரிக்காவின் Gulfstream நிறுவனத்தின் விமானங்களுக்கு கனடா சான்றிதழ் வழங்க மறுப்பதே இந்த மோதலுக்கு காரணமாகும். அமெரிக்காவின் கல்ப்ஸ்ட்ரீம் 500, 600, 700 மற்றும் 800 ரக ஜெட் விமானங்கள் உலகத்தரம் வாய்ந்தவை என்றும், அவற்றுக்குக் கனடா அரசு சட்டவிரோதமாகச் சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நிபந்தனை

மீண்டும் வரி ஆயுதத்தை கையிலெடுத்த டிரம்ப்

கனடா உடனடியாக கல்ப்ஸ்ட்ரீம் விமானங்களுக்கு சான்றிதழ் வழங்காவிட்டால், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து விமானங்கள் மீதும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் தனது பதிவில் மிரட்டியுள்ளார். கனடாவின் முன்னணி நிறுவனமான பாம்பார்டியரின் 'குளோபல் எக்ஸ்பிரஸ்' (Global Express) உள்ளிட்ட அனைத்து விமானங்களின் சான்றிதழ்களை அமெரிக்கா ரத்து செய்யும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Advertisement

பின்னணி

அரசியல் பின்னணியும், கனடாவின் பதிலும்

இந்த வர்த்தக மோதல் ஒருபுறமிருக்க, கனடாவின் எரிசக்தி மையமான Alberta மாகாணத்தை சேர்ந்த பிரிவினைவாதக் குழுவினரை ட்ரம்ப் நிர்வாகம் சந்தித்ததாக வெளியாகும் தகவல்கள் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு கனடாவிலிருந்து சுதந்திரம் கோருகிறது. கனடாவை பிரிப்பது பற்றிய எந்தவொரு கருத்தையும் ஒட்டாவா பலமுறை நிராகரித்துள்ளது. இந்த நிலையில் தான் கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்ற வேண்டும் என்று ட்ரம்ப் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலளித்த கனடா பிரதமர் மார்க் கார்னி, "அமெரிக்க நிர்வாகம் கனடாவின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது குறித்து அதிபர் ட்ரம்ப்பிடம் நான் தெளிவாகப் பேசியுள்ளேன்," என்று தெரிவித்துள்ளார்.

Advertisement