"விரைவில் வெளியேறும் அமெரிக்கா": ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருகிறார் ட்ரம்ப்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வரும் பதற்றமான சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கா நிறைவு செய்யக்கூடும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போர், விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்பதை அதிபரின் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், "நாங்கள் மிக விரைவில் அங்கிருந்து வெளியேறுவோம்" என்று குறிப்பிட்டார். இந்த வெளியேற்றம் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நிகழக்கூடும் என அவர் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
.@POTUS on concluding Operation Epic Fury: I would say that within two or three weeks... but we want to knock out every single thing they have. Now, it's possible that we'll make a deal before that. pic.twitter.com/tL72kmJxpf
— Rapid Response 47 (@RapidResponse47) March 31, 2026
ஒப்பந்தம்
ஒப்பந்தம் இன்றி முடியும் போர்
ஈரானுடன் எந்தவொரு முறையான தூதரக ஒப்பந்தமும் இல்லாமலேயே இந்தப் போர் முடிவுக்கு வரும் என்று ட்ரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். "ஈரான் என்னுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று குறிப்பிட்ட அவர், ஈரானின் அணுசக்தித் திறன் மற்றும் ராணுவக் கட்டமைப்பு முழுமையாகச் சிதைக்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் என்பதைத் தெளிவுபடுத்தினார். அமெரிக்கா தனது ராணுவச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்வதற்கான தெளிவான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. மேலும், புதன்கிழமை இரவு 9 மணிக்கு (அமெரிக்க நேரம்) அதிபர் ட்ரம்ப் இது குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மிரட்டல்
ஈரானின் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான மிரட்டல்
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஒருபுறம் இருக்க, ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) மற்றொரு அதிரடி மிரட்டலை விடுத்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைக் குறிவைக்கப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்க ராணுவம் தனது தாக்குதல்களுக்கு இத்தகைய நிறுவனங்களின் ஏஐ (AI) மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவிகளைப் பயன்படுத்துவதே இதற்குக் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பதற்றமான சூழலிலும், அமெரிக்கத் தூதர்கள் மூலம் ஈரானுக்குத் தொடர்ந்து செய்திகள் அனுப்பப்பட்டு வருவதாக ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.