அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு 15% கார்ப்பரேட் வரியை குறைக்கப்போவதாக டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் வியாழனன்று பொருளாதாரத்திற்கான தனது திட்டங்களை கோடிட்டுக் காட்டிய நிலையில், கார்ப்பரேட் வரிகளை 15 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்தார். டிரம்ப் வரிகளை குறைக்கவும், தொழில்களை ஊக்கப்படுத்தவும் புதிய உறுதிமொழிகளை அளித்தார். கார்ப்பரேட் வரி விகிதத்தை 21 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைப்பதாக உறுதியளித்த அவர், மூலதன ஆதாயங்கள் மற்றும் ஈவுத்தொகை மீதான வரிகளைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தனது ஆலோசகர்களுடன் ஆலோசித்து வருவதாகக் கூறினார்.
வரியை குறைப்பதாக அறிவித்த டிரம்ப்
"வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஊக்கத்தொகையை நாங்கள் வழங்கப் போகிறோம். உங்கள் வரிகளை குறைக்கிறோம்.. நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து 42 அல்லது 44 சதவீதத்தில் இருந்து 21 சதவீதத்தைப் பெற்றோம், அதை 21 ஆகக் குறைத்தோம். இது ஒரு அதிசயம் என்று எல்லோரும் சொன்னார்கள். இப்போது நாங்கள் அவற்றை 15 ஆகக் குறைக்கிறோம், ஆனால் நீங்கள் உங்கள் தயாரிப்பை இங்கே செய்தால் மட்டுமே," என்று அவர் கூறினார்.
உற்பத்தியாளர்களை ஈர்க்கும் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப், கார் தயாரிப்பாளர்கள் உட்பட உற்பத்தியாளர்களை மேலும் நம்பிக்கைக்குரிய ஊக்கத்தொகைகளுடன் அமெரிக்காவிற்குத் திரும்புமாறு வலியுறுத்தினார். "பெரிய நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு, அந்த பெரிய பெரிய அழகான நிறுவனங்களுக்கு, யாரும் எங்களை விட்டு வெளியேறப் போவதில்லை. நீங்கள் திரும்பி வரப் போகிறீர்கள். நீங்கள் அதை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப் போகிறீர்கள். அனைவரையும் திரும்பி வர ஊக்குவிக்கிறோம். கார் உற்பத்தியாளர்கள், அனைவரும் உங்களை இங்கு திரும்ப விரும்புகிறோம்," என்று அவர் அறிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பொறுப்பேற்கிறார்