
ஏமன் மீதான போர்த்திட்டங்கள் ஊடகத்திற்கு கசிவு; அமெரிக்காவில் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சிக்னல் என்ற பாதுகாப்பான செய்தியிடல் செயலி மூலம் பகிர்ந்த போர்த் திட்டங்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அட்லாண்டிக் பத்திரிகை அதன் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க், ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வரவிருக்கும் ராணுவத் தாக்குதல்கள் குறித்த விவரங்களைக் கொண்ட அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் குழு அரட்டையில் தற்செயலாக சேர்க்கப்பட்டதாக வெளிப்படுத்தியது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் இது உண்மைதான் எனத் தெரிவித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தகவல்கள்
கசிந்த தகவல்கள்
கசிந்த செய்திகளில் ஏமனில் தாக்குதலுக்கான இலக்கு இடங்கள், தாக்குதல் வரிசைமுறை மற்றும் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் போன்ற முக்கியமான விவரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கோல்ட்பர்க் தகவலைப் பெற்ற இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுத்தி இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.
விவரங்கள் ரகசியமானவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அத்தகைய செயல்பாட்டுத் தகவல்கள் பொதுவாக மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.
குழு அரட்டையில் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் துல்சி கப்பார்ட் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
விசாரணை
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீது விசாரணை
கோல்ட்பெர்க்கை இந்த குழுவில் சேர்த்ததாகக் கூறப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் இப்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆரம்பத்தில் தனக்குத் தெரியாது என்று டொனால்ட் டிரம்ப் மறுத்தார். பின்னர் ஒரு நையாண்டி சமூக ஊடகப் பதிவைப் பகிர்ந்து கொண்டு கசிவை கேலி செய்தார்.
இதற்கிடையில், பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் இந்தக் கூற்றுக்களை நிராகரித்தார். கோல்ட்பெர்க்கை வஞ்சகர் என்று அழைத்தார்.
ஆனால் சிக்னல் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புக்கு ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடவில்லை.
சர்ச்சை இருந்தபோதிலும், வால்ட்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புக் குழு மீதான தனது நம்பிக்கையை வெள்ளை மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.