எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு DOGE -ஐ வழி நடத்தும் பொறுப்பை வழங்கினார் டிரம்ப்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்கர் விவேக் ராமசாமி ஆகியோர் இணைந்து அரசாங்க செயல்திறன் துறையை (DOGE) வழிநடத்துவார் என அறிவித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில் DOGE ஒரு அமெரிக்க அரசு நிறுவனம் அல்ல. டிரம்ப், செவ்வாய் இரவு தனது அறிவிப்பில், இந்த துறை "அரசாங்கத்திற்கு வெளியே இருந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும், மேலும் பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை இயக்குவதற்கும், அரசாங்கத்திற்கு தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்குவதற்கும் வெள்ளை மாளிகை மற்றும் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்துடன் கூட்டு சேரும்" என்றார்.
DOGE பற்றி டிரம்ப் கூறியது என்ன?
எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி பற்றி டிரம்ப்,"இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, எனது நிர்வாகத்திற்கு அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றவும், அதிகப்படியான விதிமுறைகளை குறைக்கவும், வீண் செலவுகளை குறைக்கவும், கூட்டாட்சி நிறுவனங்களை மறுசீரமைக்கவும் -- அமெரிக்காவைக் காப்பாற்றுவதற்கு அவசியம்"என்றார். DOGE -இது இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவிய அணுகுண்டை உருவாக்கும் அமெரிக்காவின் திட்டத்தைக் குறிப்பிடுவதாகும். 2026 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதிக்குள் அவர்களின் பணி முடிவடையும் என்று அவர் மேலும் கூறினார். "சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட 250 வது ஆண்டு விழாவில் ஒரு சிறிய மற்றும் திறமையான அரசாங்கம் நாட்டிற்கு ஒரு "பரிசு" என்று கூறினார்.