LOADING...
மறுபடியும் வரி வேட்டை! அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தவிடுபொடியாக்கிய டிரம்ப்! 10% இறக்குமதி வரி பிப்ரவரி 24 முதல் அமல்
உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் அதிரடி 10% தற்காலிக இறக்குமதி விதித்து உத்தரவு

மறுபடியும் வரி வேட்டை! அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தவிடுபொடியாக்கிய டிரம்ப்! 10% இறக்குமதி வரி பிப்ரவரி 24 முதல் அமல்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 21, 2026
09:38 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய 10 சதவீத தற்காலிக இறக்குமதி வரியை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20, 2026) கையெழுத்திட்டார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்து பதிவிட்ட அவர், "ஓவல் அலுவலகத்தில் இருந்து அனைத்து நாடுகளின் மீதும் 10% உலகளாவிய வரியை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன். இது உடனடியாக அமலுக்கு வரும்" என்று அறிவித்துள்ளார். இதையடுத்து, இந்த வரி விதிப்பு பிப்ரவரி 24 முதல் அமலுக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தீர்ப்பு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் டிரம்பின் பதிலடியும்

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் இதற்கு முன்பு விதித்திருந்த வரிகள் செல்லாது என்று தீர்ப்பளித்தது. 1977 ஆம் ஆண்டின் அவசர கால அதிகாரச் சட்டத்தின் கீழ் அதிபர் வரி விதிக்க முடியாது என்றும், வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும் 6-3 என்ற விகிதத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் தடையைத் தாண்டி, 1974 ஆம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் பிரிவு 122 ஐ பயன்படுத்தி இந்த புதிய வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்தச் சட்டம் வர்த்தகப் பற்றாக்குறையை சமாளிக்க 150 நாட்களுக்கு 15% வரை வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது.

Advertisement

முக்கிய அம்சங்கள்

புதிய வரி விதிகளின் முக்கிய அம்சங்கள்

கால அளவு: இந்த 10% வரி அடுத்த 150 நாட்களுக்கு (சுமார் 5 மாதங்கள்) அமலில் இருக்கும். இலக்கு: இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். குறிப்பாக கனடா மற்றும் மெக்சிகோவிற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் வரி: ஏற்கனவே உள்ள வரிகளுடன் இந்த 10% வரி கூடுதலாகச் சேர்க்கப்படும். சில நாடுகளுக்கு (சீனா போன்ற நாடுகள்) 301 வது பிரிவின் கீழ் இன்னும் கடுமையான வரிகள் விதிக்கப்படலாம் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Advertisement