மகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: உலகின் சிறந்த டாப் 5 பெண் அரசியல் தலைவர்கள்
செய்தி முன்னோட்டம்
உலகெங்கிலும் உள்ள பெண்களைக் கொண்டாடும் வகையில், மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பொதுவாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசியலில், பெண்கள் தடைகளை உடைத்து, நாடுகளை வழிநடத்தி, உலகளாவிய கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.
வரலாற்று சவால்களை எதிர்கொண்ட போதிலும், பலர் அதிகாரத்தின் மிக உயர்ந்த பதவிகளுக்கு உயர்ந்து, தலைமைக்கு பாலினம் கிடையாது என்பதை நிரூபிக்கின்றனர்.
இந்த நாளை நாம் கொண்டாடும் வேளையில், இன்று உலகை வடிவமைக்கும் மிகவும் செல்வாக்கு மிக்க சில பெண் அரசியல் தலைவர்களைப் பார்ப்போம்.
ஜியோர்ஜியா மெலோனி
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி
ஜியோர்ஜியா மெலோனி 2022 இல் இத்தாலியின் முதல் பெண் பிரதமராகி வரலாறு படைத்தார்.
வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியை வழிநடத்தி, பொருளாதார சீர்திருத்தங்கள், குடியேற்றக் கொள்கைகள் மற்றும் ஐரோப்பிய உறவுகள் குறித்த இத்தாலியின் நிலைப்பாட்டை வடிவமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அவரது தலைமை இத்தாலியின் அரசியல் சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
உர்சுலா வான் டெர் லேயன்
ஐரோப்பிய ஒன்றிய ஆணையாயத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்
ஐரோப்பிய ஆணையத்தின் முதல் பெண் தலைவராக, உர்சுலா வான் டெர் லேயன் உலக அரசியலில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக மாறியுள்ளார்.
காலநிலை மாற்றம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பதிலளிப்பை எதிர்கொள்வதில் முன்னணியில் இருந்து, ராஜதந்திரம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துகிறார்.
ஷேக் ஹசீனா
பங்களாதேஷின் ஷேக் ஹசீனா
2009 முதல் பங்களாதேஷின் பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா, நீண்டகாலமாக பதவியில் இருந்த பெண் அரசாங்கத் தலைவர்களில் ஒருவர் ஆவார்.
பொருளாதார மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் வறுமைக் குறைப்பு ஆகியவற்றில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இது பங்களாதேஷை தெற்காசியாவில் ஒரு எழுச்சி பெறும் சக்தியாக மாற்றியுள்ளது.
எனினும், தற்போது அந்நாட்டில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தால் நாட்டிலிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
காஜா கல்லாஸ்
எஸ்டோனியாவின் முதல் பெண் பிரதமர்
எஸ்டோனியாவின் முதல் பெண் பிரதமர் காஜா கல்லாஸ், ஜனநாயகம், சைபர் பாதுகாப்பு மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கான வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறார்.
உலகளாவிய பாதுகாப்பு பிரச்சினைகளில், குறிப்பாக ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனை ஆதரிப்பதில் அவர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
சன்னா மரின்
பின்லாந்தின் முன்னாள் பிரதமர் சன்னா மரின்
2019 முதல் 2023 வரை பின்லாந்தின் பிரதமராகப் பணியாற்றிய சன்னா மரின், உலகின் இளைய தலைவர்களில் ஒருவரானார்.
பின்லாந்தின் சமூக நலக் கொள்கைகளை வலுப்படுத்துவதிலும் அதன் நேட்டோ உறுப்பினர் நிலையைப் பெறுவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், பெண்களின் குரல்களும் முடிவுகளும் நாடுகளை வடிவமைக்கின்றன மற்றும் உலகளாவிய கொள்கைகளை பாதிக்கின்றன என்பதை இந்தத் தலைவர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள்.
அவர்களின் பயணங்கள் அடுத்த தலைமுறை பெண்களை தலைமைப் பாத்திரங்களில் அடியெடுத்து வைக்க ஊக்குவிக்கின்றன.
மேலும், பாலினம் அரசியலில் வெற்றிக்கு ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கின்றன.