அடுத்த செய்திக் கட்டுரை

உண்மையாக 'டைம் ட்ராவல்' செய்த விமானம்! 2023 இல் தொடங்கி 2022க்கு சென்ற அதிசயம்
எழுதியவர்
Sindhuja SM
Jan 03, 2023
04:03 pm
செய்தி முன்னோட்டம்
'டைம் ட்ராவல்' செய்ய முடியுமா முடியாதா என்று விஞ்ஞானிகள் மூளையை பிய்த்து கொண்டிருக்க, அதை காற்று வாக்கில் செய்து காட்டியுள்ளது ஒரு விமானம்.
தென்கொரியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஒரு விமானம் 2023ஆம் ஆண்டு பயணத்தைத் தொடங்கி 2022ஆம் ஆண்டிற்கு சென்றுள்ளது.
இந்த விமானம் 2023ஆம் ஆண்டு பிறந்து 28 நிமிடங்களுக்கு பிறகு தென்கொரியாவில் இருந்து கிளம்பியது.
9.46 மணிநேரம் பயணம் செய்த இந்த விமானம், டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5 மணியளவில் அமெரிக்காவில் தரை இறங்கியுள்ளது.
சர்வதேச நேரம் என்பது பசிபிக் பெருங்கடலை மையமாக வைத்து கணக்கிடப்படுகிறது.
அதனால், ஆசியாவின் நேரத்தை விட அமெரிக்காவின் நேரம் எப்போதும் 23மணிநேரம் பின்தங்கி இருக்கும்.
இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.