கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்!
செய்தி முன்னோட்டம்
சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கும் கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் இந்த சொர்க்க பூமியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ஒரே இடத்தில் உறைந்து போன பனியையும் ஓடி விளையாடும் அலைகளையும் பார்க்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா?
இப்படி ஒரு இடம் தான் ஜப்பானில் இருக்கிறது. இதன் பெயர் "சன்'இன் கைகன்" ஜியோபார்க்.
இது 2008ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் "குளோபல் ஜியோபார்க்" என்று அறிவிக்கப்பட்ட இடமாகும்.
இது கிழக்கு கியோகாமிசாகி கேப், கியோட்டோ முதல் மேற்கு ஹகுடோ கைகன் கடற்கரை, டோட்டோரி வரை நீள்கிறது.
இந்த பகுதி இயற்கையின் மிக அரிதான பன்முகத்தன்மைகளைக் கொண்டுள்ளதால் தான் இதற்கு ஜியோபார்க் என்னும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
12 Dec 2022
இயற்கையின் பன்முகத்தன்மைகள் ஒரே இடத்தில்!
ரியா வகை கடற்கரைகள், மணல் திட்டுகள் , மணல் குவியல்கள், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் போன்ற பன்முகமான புவியியல் தன்மைகளை இந்த ஒரே இடத்தில் நாம் காணலாம்.
இது இப்படி ஒரு விசித்திரமான இடமாக இருப்பதால் விசித்திரமான அரிய வகைத் தாவரங்களையும் இங்கு பார்க்க முடியும்.
இது போக இங்கு நிறைய வெந்நீர் ஊற்றுகளும் இருக்கிறது.
அழகாக இருப்பதில் எல்லாம் ஏதோ ஒரு ஆபத்தும் இருக்கும் என்று சொல்வது போல இது என்னதான் அழகாக இருந்தாலும் இந்த பகுதிகளில் அடிக்கடி பூகம்பம் வருமாம்.
இங்கு இதுவரை மூன்று பெரிய பூகம்பங்கள் வந்து பேரழிவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்த இடம் பேரழிவுகள் பற்றி படிக்கக்கூடிய கல்விப் பொருளாகவும் செயல்பட்டு வருகிறது.