
பணம் வாழ்வில் வசதியைத் தந்தாலும் நிறைவைத் தராது - பில் கேட்ஸ் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடம் தொடங்குகிறது என்றாலே அந்த வருடத்தில் நடந்தவைகளை எல்லாம் ஒரு முறை நினைத்து பார்ப்பது மனித இயல்பு.
ஆண்டு முடியும் போது பலர் தங்கள் ஒரு வருட அனுபவத்தை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவர்.
2023 ஆம் வருடம் பிறப்பதற்கு இன்னும் ஒரே ஒரு வாரம் தான் இருக்கிறது. இந்நிலையில், பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஒரு வருட நினைவுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இது போன்ற ஒரு வலைபதிவை சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.
23 Dec 2022
குடும்பத்தை நினைத்து பூரிக்கும் பில் கேட்ஸ்!
இந்த பதிவில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
பணக்காரனாக இருப்பது வசதிகளைத் தரும். ஆனால் வாழ்க்கையில் நிறைவைத் தராது.
அந்த நிறைவைத் தருவதற்காகத் தான் நம் வாழ்வில் குடும்பம், நண்பர்கள் மற்றும் வேலை இருக்கிறது.
எனக்கு அந்த மூன்றுமே நல்லவிதயாக கிடைத்திருக்கிறது. அதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இந்த வருடம் என் மகள் திருமணம் செய்து கொண்டாள். அடுத்த வருடம் எனக்குப் பேர குழந்தைப் பிறக்க இருக்கிறது.
இதெல்லாம் இந்த வயதான காலத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
'எனக்கு பேர குழந்தைப் பிறக்கப் போகிறது' என்று எழுதும் போதே என் கண்கள் ஆனந்தத்தில் கலங்குகின்றன.
அவர்களுக்காக ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து தர வேண்டும் என்று தோன்றுகிறது, என்று குறிப்பிட்டிருந்தார்.