சிரியாவிலிருந்து தப்பியோடிய அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்; அரண்மனையை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்
கிளர்ச்சியாளர்களின் தாக்குதலிலிருந்து தன்னை காப்பாற்றி தப்பிய சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத், ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அதே நேரத்தில், ஆசாத் குடும்பத்தின் அரண்மனை கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. சிரியா அதிபராக 2000ம் ஆண்டு இருந்து பதவி வகித்து வருகிறார் பஷார் அல் ஆசாத். அதற்கு முன்னர் 30 ஆண்டுகள் அவரது தந்தை ஹபீஸ் அல் ஆசாத் சிரியாவின் ஆட்சியாளராக இருந்தார். தந்தையின் மரணத்துக்குப் பின்னர் பதவியேற்ற ஆசாத், அவரது வழிமுறைகளை பின்பற்றி எதிர்ப்பாளர்களை திடக்கரமாக அடக்கினார். எனினும் 2011ம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் சிரியாவின் உள்நாட்டு போராக மாறின. அதில் அரசுக்கு எதிரான பல அமைப்புகள் மற்றும் பயங்கரவாதக் குழுக்கள் சேர்ந்தன.
கடந்த மாதம் ஓங்கிய கிளர்ச்சியாளர்கள் கை
அப்போது, அல்-குவைதாவின் பகுதியான எச்.டி.எஸ். (ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம்) குழுவின் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி தீவிர தாக்குதல்கள் செய்யத் தொடங்கினர். அலெப்போ நகரை கைப்பற்றி, ஹாம்ஸ் நகரையும் சூழ்ந்து வளைத்தனர். இதன் தொடர்ச்சியாக சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் சூழ்ந்து நகரத்தை கைப்பற்றினர். இதனிடையே, அதிபர் ஆசாத் விமானம் மூலம் தப்பி வெளியேறினார். NDTV வெளியிட தகவலின்படி, ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யாவில், மாஸ்கோவில் தஞ்சம் அடைந்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது. அதை அடுத்து, கிளர்ச்சியாளர்கள் சிரியாவில் டமாஸ்கஸ் அரண்மனையை கைப்பற்றினர். தற்போது, அரண்மனையில் கிளர்ச்சியாளர்கள் உலா வரும் வீடியோக்கள் இணையத்தில் பரவுகிறது.