ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய இரண்டு அதிவேக ரயில்கள்: 21 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்
செய்தி முன்னோட்டம்
ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள கோர்டோபா மாகாணத்தில், அடமுஸ் (Adamuz) நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஸ்பெயின் அரசு ஊடகமான RTVE தெரிவித்துள்ளது. மாலகாவிலிருந்து மேட்ரிட் நோக்கி சென்ற 'இரியோ' (Iryo) நிறுவனத்தின் அதிவேக ரயிலும், மேட்ரிட்டிலிருந்து ஹுவெல்வா நோக்கிச் சென்ற 'ரென்பே' (Renfe) நிறுவனத்தின் ரயிலும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரியோ ரயில் திடீரென தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்திற்கு சென்றதே இந்த விபத்திற்கு முதற்கட்ட காரணமாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ரென்பே ரயிலின் ஓட்டுநரும் உயிரிழந்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
At least 7 dead, over 100 injured after high-speed train derails in southern Spainpic.twitter.com/7SkDBqJ2L7
— BNO News Live (@BNODesk) January 18, 2026
மீட்பு பணிகள்
பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட பயணிகள்
விபத்து நடந்த இடத்திற்குத் தீயணைப்புப் படையினர், செஞ்சிலுவை சங்கம் மற்றும் அவசரகால மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சிதைந்த ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்கப் பல மணி நேரம் போராட வேண்டியிருந்தது. விபத்து நடந்தபோது இரியோ ரயிலில் 300-க்கும் மேற்பட்டோரும், ரென்பே ரயிலில் 100-க்கும் மேற்பட்டோரும் பயணம் செய்துள்ளனர். இந்த துயர சம்பவத்தை அடுத்து, மேட்ரிட் மற்றும் ஆண்டலூசியா இடையேயான அதிவேக ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.